Sunday, February 11, 2007

காதலர் தினம்

Valentine’s day என்பதை நம் ஊரில் காதலர் தினம் என்று மொழி பெயர்த்து விட்டார்கள். ஆங்கிலத்தில் அதை lovers day என்றோ அல்லது அதன் பொருள்படும்படியாகவா அதை கொண்டாடுகிறார்கள்?!

இங்குள்ள ஆரம்ப பள்ளிகளில் இந்த தினத்தை நட்புக்கும் அன்புக்கும் உரிய தினமாக கொண்டாடுகிறார்கள். தமிழ் நாட்டில் FM ரேடியோ முதல் Sun Music வரை இப்போது முக்கியமான கேள்விகள் “உங்கள் காதலிக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?”, “முத்தம் தான் சிறந்த பரிசா?”. நம் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது!

நானும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவன் தான். ஆனாலும் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள், அதுவும் நம் ஊரில், வித்தியாசமாக தெரிகிறது.

நம் நாட்டில் காதல் கல்யாணங்கள் அதிகம் நடந்தால், அதனால் ஜாதி பேதம் அழிய வாய்ப்பிருக்கிறது. இந்த வாரம் விகடனில் திரு.ஞாநி அவர்களும் இதே கருத்தை எழுதியிருந்தார். ராமதாஸ் போன்றவர்கள் காதலை எதிர்ப்பதற்கு தன் ஜாதி அரசியல் பாதிக்குமோ என்று அச்சப்படுவதாக எழுதியிருந்தார். காதலர்கள் மூலம் ஏதாவது நல்லது நடந்தால் சரிதான்!

ஆதலால் காதல் செய்யுங்கள்… முக்கியமாக கலப்பு திருமணம் செய்யுங்கள்!

4 comments:

அருட்பெருங்கோ said...

/ஆதலால் காதல் செய்யுங்கள்… முக்கியமாக கலப்பு திருமணம் செய்யுங்கள்! /

வழிமொழிகிறேன்...

Bharathi said...

நன்றி!

kajan said...

நான் ஆதரிக்கிறேன்

Surya said...

என்கருத்தை இங்கும் பதிக்கிறேன்
___________________

மனித உறவுகள் மற்றும் கொண்டாட்டங்கள் - பிறரை - பிறவுயிரை - இவ்வுலகை எவ்வகையிலும் கெடுக்காதவரை அவை மனித உரிமைகள். அவற்றை பறிப்பவர்கள்தான் தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும்.

சமூகம் - குடும்பம் இவ்விரண்டும் குழந்தைகளை வளர்பதில் - அதிலும் நம் இந்தியா போன்ற நாடுகளில் - மனிதங்களை சிறக்க வைப்பதில் உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழமுடியும். பெரும்பாலானவர்களுக்கு இது புரிந்தாலும் எப்படி வளர்ப்பது என்பதில் ஆதிக்க சிந்தனையை கொண்டு குறுகிய கண்ணோட்டத்தை விதைக்கிறார்கள். வாழ்-வசதிகளில் எளிய மக்களின் குழந்தைகள் வாழ்க்கை புரியாமலேயே சமூக எதிரிகளிடம் அடிமைப்படுகிறார்கள். ஆகவே இதில் மற்றவர்களை எப்போது புரிந்துகொள்வது?

சரி தீர்வு என்ன?

பழமைவாதிகளில், போலித்தனமான அரசியல்வாதிகளில் பலரை (99.9%) மூட்டைகட்டி அப்புறப்படுத்தினால், இக்கால இளைஞர்கள் விடுபட்டு வெளிவந்து உலகத்தில் வாழ்வதையே இனிமையாக்குவார்கள். அதற்கு நாளானாலும் அது நடக்கும் என்று நம்புகிறேன். தேவை சிறந்த சுயனலமற்ற - தலைமைகள் மற்றும் அவர்களை வழிகாட்டி ஊக்கமளித்து உருவாக்க - தெளிந்த சான்றோர்கள்.

இயற்கை வழியில் யோசியுங்கள்.

இந்த பூலோக - ஏன் பிரபஞ்சத்திற்கே மனிதன் என்பது ஒரு அபூர்வ உயிரினம். உலக உருண்டையின் வாழ்கையில் அதன் மேனியெல்லம் அறிந்த கிருமித்தனமான காதலன் - மனிதன் மட்டுமே. அவனும் இந்த பெரிய உலகத்தை பொருத்தவரை - ஈசல் போல வந்து வாழ்ந்து மறைபவன்.

இதே அபூர்வ மனிதஉயிரினமானது பெரும்பாலும் வசதிகள், அதிகாரங்கள் - மூளைசலவை வார்த்தைகளுக்கு அடிமைபடும், எனவே தன் சிந்திக்கும் - பகுத்தறியும் திற்னையே கொச்சைபடுத்திக்கொள்ளும். அதில் சில அடிமைதனங்கள் மரபணுசார்ந்தே இருந்தாலும் சிந்திக்கும் மேன்மையான திறமை மனிதனை அவனுடைய அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்லும்.

இந்த உலகத்தை புரிந்துகொண்டு ஒன்றுபட்ட கைகளால் அணைத்துக்கொள்வோமா? இல்லை வேறுபாடுகளை விரிவுபடுத்திக்கொண்டு நம் தலைக்கு நாமே கொள்ளிவைத்துக்கொள்வோமா?

இனம் - மதம் - சாதி அடிப்படையான அமைப்புகள் மக்களை மூடர்களாகவே வைத்துக்க்கொள்ள விரும்பும் முரட்டுதனமான குறூகிய கண்ணோட்ட அமைப்புகள். அவற்றை ஊக்கப்படுத்தாதீர்கள்.

அவற்றால் உலகெங்கும் மனிதகுலம் இழந்த, இழக்கின்ற இழப்புகள் போதும்.

இளைய சமூகம் சிந்திக்கட்டும்!

Related Posts Plugin for WordPress, Blogger...