Thursday, February 08, 2007

தாமிரபரணி சினிமா பாட்டு

என் சிறு வயதிலிருந்து பல நூறு தடவை கேட்ட பாடல் – “கற்பூர நாயகியே கனக வள்ளி…” அந்த பாட்டை உல்டா செய்து “கருப்பான கையாலே என்னை பிடிச்சான்” என்று ஒரு குத்துப்பாட்டு பாடியிருக்கிறார்கள்.

இந்த பாடலும் கேட்க நன்றாக தான் இருக்கிறது. இருந்தாலும் பிரபலமான பக்திப்பாடலை இப்படி கொலை செய்வது சரியா? பல வருடங்களுக்கு முன்னால் சூரியன் படத்தில் கந்த சஷ்டி கவசத்தை கடித்து குதறி ஒரு ரொமான்டிக் பாடலை தேவா இசையமைத்தார். இப்போது யுவன் சங்கர் ராஜா ஒரு காவியம் படைத்துள்ளார்.

இதே போல ரஹ்மான் செய்திருந்தால் அதற்கு மத சாயம் பூசி தமிழ் பெருங்குடி மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தியிருப்பார்கள்.

பின் குறிப்பு: தமிழ் நிதிக்கும் தாமிரபரணிக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமுமில்லை! பணம் சம்பாதிப்பது பற்றி நான் எழுதும் பயனுள்ள பதிவுகளுக்கு வராத விசிட்ஸ் சினிமா பற்றிய பதிவுகளுக்கு வருகிறது, அதனால் தான். ;-)

2 comments:

குமரன் (Kumaran) said...

உண்மையாவா சொல்றீங்க? நான் இதுவரை எந்த சினிமா பதிவும் இங்கே படிச்ச மாதிரி நினைவில்லையே?

Bharathi said...

உண்மை தான்! இது வரை இந்த பிளாக்கிற்கு அதிக விசிட்ஸ் வந்தது --http://tamilnithi.blogspot.com/2006/02/tribute-to-ar-rahman.html பதிவிற்கு தான்.

கூகுள் வழியாக இன்னும் இந்த பதிவிற்கு அதிக ஹிட்ஸ் வந்து கொண்டிருக்கிறது. தலைப்பு ஆங்கிலத்தில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...