Monday, February 05, 2007

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

பாடகி அனுராதா இப்படி பாடினாலும் உண்மையிலேயே அவருக்கு கருப்பு கலர் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். தோலின் நிறத்தை பார்த்து ஒருவரின் அறிவையும் திறமையையும் எடை போட கூடாது என்று தெரிந்தாலும் நிறைய பேர் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

என் நண்பன் சென்னையில் Siemens நிறுவனத்தின் மேலாளராக இருந்தான். “சிவப்பு தோல் இருந்தால் போதும், இந்த கம்பெனியில் வேலைக்கு எடுத்து கொள்வார்கள்” என்று அவன் சொல்வான். நான் வேலை செய்த கம்பெனிகளிலும் இதை உணர்ந்ததுண்டு. ஆனாலும், நான் வேலை செய்த இடங்களில் சிவப்பு நிறத்தை மட்டும் காரணமாக வைத்து யாரையும் வேலைக்கு எடுத்ததில்லை. அவர்கள் அப்படி செய்திருந்தால், என்னைப் போன்ற ஆட்களுக்கு வேலையே கிடைத்திருக்காது.

நமக்கு உணர்வு பூர்வமாக தெரிவதை விஞ்ஞான ரீதியாக நிருபிப்பது அமெரிக்கர்களின் வேலை. Vanderbilt பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர் Joni Hersch இதைப்பற்றிய ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவரின் கட்டுரையிலிருந்து சில குறிப்புகள்.

1. கருப்பு நிறத்தில் உள்ளவர்களை விட மாநிறத்தில் உள்ளவர்கள் 8 – 15% கூடுதல் சம்பளம் வாங்குகிறார்கள்.
2. மாநிறத்தில் உள்ளவர்களை விட வெள்ளை நிறத்தில் உள்ளவர்கள் 8 – 15% கூடுதல் சம்பளம் வாங்குகிறார்கள்.
3. ஒரு shade கலர் தூக்கலாக இருப்பது ஒரு வருடம் அதிகம் படித்ததற்கு சமம்.
4. உயரமானவர்கள் குள்ளமானவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். (Michael Fox போன்றவர்கள் மட்டும் விதிவிலக்கு!)

அமெரிக்காவில் கருப்பின மக்கள் அதிகம் முன்னேறாமல் இருப்பதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் – “நாங்கள் கருப்பாக இருப்பதால் வெள்ளைக்காரர்கள் எங்களை முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்”. அதில் ஓரளவு உண்மையிருந்தாலும், அது மட்டும் காரணமல்ல. கருப்பின மக்களில் பெரும்பாலானோர் முழு சோம்பேறிகள். அந்த சோம்பேறித்தனம் தான் அவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது.

அமெரிக்க கருப்பின மக்கள் தங்கள் இனத்தவரிடமே நிற பாகுபாடு பார்ப்பதாக போன வருடம் நடத்தப்பட்ட சர்வே கூறுகிறது! அதிகமாக கருப்பாக உள்ளவர்களிடமிருந்து கொஞ்சம் மாநிறமாக உள்ள கருப்பினத்தவர்கள் ஒதுங்கியே இருப்பதாக அந்த ஆராய்ச்சி கூறுகிறது.

2 comments:

மாசிலா said...

:-(

Bharathi said...

இது அப்செட் செய்யும் விஷயம் தான். மற்றவர்கள் மனதை நம்மால் படிக்க முடியாது, இந்த மாதிரி ஆராய்ச்சிகளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.

பணம் சம்பாதிப்பதை பற்றிய பதிவுக்காக (என் ஆங்கில பிளாக்கிற்காக) விஷயங்கள் திரட்டும்போது ஜோனி ஹெர்ச்சின் கட்டுரையை படிக்க நேர்ந்தது.

நம் ஊரில் ஜாதி வேறுபாடு போல உலகம் முழுதும் ஏதாவது ஒரு பிரச்னை. நிறம், மொழி, இனம், மதம், etc., etc., மனிதனின் ஆழ்மனத்தில் உள்ள பொறாமைக்கும் துவேஷத்துக்கும் இது வடிகால்.

Related Posts Plugin for WordPress, Blogger...