Monday, December 11, 2006

Multi-tasking

நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவராக இருந்தால், Multi-tasking என்பதே உங்கள் மந்திரமாக இருக்கும். உங்களிடம் வேலை செய்பவர்களையும் Multi-tasking செய்ய சொல்லி துன்புறுத்தியிருப்பீர்கள்! Multi-task செய்வதால் சிலருக்கு பெரிய பிரச்னைகள் வரக்கூடும் என்று ஆய்வுகளில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

National Institute for Occupational Safety and Health என்ற ஆய்வுக்கூடத்தில் டயான் மில்லர் என்ற விஞ்ஞானி செய்த ஆய்வின் படி அறியப்பட்ட விஷயங்கள்…

பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதால் சிலருக்கு அதிக பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு அதனால் இரண்டு எமர்ஜென்ஸி ஹார்மோன்கள், அட்ரினலின் மற்றும் கார்டிசால், வேகமாக சுரக்கிறது.

மூச்சு பட பட என்றாவது, இதயம் வேகமாக துடிப்பது போன்றவை அட்ரினலின் உபயம். ஈரலிலிருந்து குளுகோஸை திருடி உடம்புக்கு அதிக சக்தியை தருவது கார்டிசாலின் வேலை. அது மட்டுமில்லாமல், தற்காலிகமாக உடம்பின் நோய் தடுப்பு சக்தியையும் இது குறைத்து விடுகிறது. ஹார்மோன்கள் இது போல அடிக்கடி வீறு கொண்டு முறுக்கேறினால் சங்கை ஊதி விட வேண்டியது தான் என்று டயான் எச்சரிக்கிறார்.


ஆனால் இதற்கெல்லாம் நாம் பயப்படுவோமா, என்ன?! ஒரே திரையில் ஆறு வின்டோக்களை திறந்து வைத்துக்கொண்டு வேலை பார்த்தால் தான் திறமையுடன் வேலை பார்ப்பதாக இருப்பதாக மற்றவர்கள் நம்புகிறார்கள்.

2 comments:

குமரன் (Kumaran) said...

உண்மை தான் பாரதி. என்னால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகள் செய்ய முடிகிறது. ஆனால் என் குழுவில் சிலருக்கு அது முடிவதில்லை. செய்ய வேண்டும் என்று நான் வற்புறுத்தியதும் உண்டு. ஆனால் அவர்களால் முடியவில்லை என்ற பின் ஒரே வேலையில் ஈடுபடுமாறே வேலைகள் கொடுத்துக் கொண்டு வருகிறேன். அதற்கு அறிவியல் அடிப்படையைச் சொன்னதற்கு நன்றி. இனிமேல் இது மனதில் இருக்கும். யாரால் மல்டி டாஸ்கிங்க் செய்ய முடிகிறதோ அவர்கள் மட்டும் செய்யட்டும். எனக்குத் தெரிந்து இரண்டிலுமே அதே அளவு தான் வேலை முடிகிறது.

Bharathi said...

ஹலோ குமரன், தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...