Saturday, December 23, 2006

குழந்தைகளை தொந்தரவு செய்யும் குழந்தைகள்

Child Bullies என்பதற்கான சரியான மொழி பெயர்ப்பு தெரியாததால், நீண்ட தலைப்பை கொடுத்து விட்டேன். உங்களுக்கு சிறு குழந்தைகள் இருந்து அவர்கள் bulliesகளால் பாதிக்கப்பட்டிருந்தால், கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

1, உங்கள் குழந்தை உங்களிடம் புகார் செய்யும் போது காது கொடுத்து கேளுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

2. குழந்தைகளின் பிரச்னைகளை பொறுமையாக, விபரங்களுடன் கேளுங்கள்.

3. அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்குமாறு நல்ல வார்த்தைகள் சொல்லி தெம்பூட்டுங்கள். “அவன் அடிச்சான்னு என்கிட்ட வந்து சொல்றியே, உனக்கு வெட்கமாயில்லை” என்று கடிக்காதீர்கள்.

4. குழந்தைகளை bully செய்யும் குழந்தைகளின் மன நிலையை விளக்கி சொல்லுங்கள். பொதுவாகவே bully செய்யும் குழந்தைகள் மனதளவில் பாதுகாப்பு இல்லாமல் (insecured feeling) இருப்பதால் தான் மற்ற குழந்தைகளை வேதனைப்படுத்துகிறார்கள்.

5. உங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் உடனே புகார் கொடுக்காதீர்கள். Bulliesகளை எப்படி சமாளிப்பது என்று சிறு வயதிலியே குழந்தைகள் கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும். Bulliesகளின் தொல்லைகள் தொடர்ந்தால் மட்டும் ஆசிரியரிடம் புகார் கொடுக்கலாம். Exception: உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனே சரி செய்ய வேண்டும். சில சமயங்களில், அதுவும் அமெரிக்க நகரங்களில் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதில்லை. என் நண்பரின் 6 வயது மகளின் கையில் அவள் வகுப்பு பெண் ஒரு ஊசியை குத்தி வேடிக்கை பார்த்தாளாம். இது போன்ற விபரங்களை உடனே பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

6. தொந்தரவு செய்யும் குழந்தைகள் tease செய்யும்போது புத்திசாலித்தனமாக பதிலடி கொடுக்க சொல்லிக் கொடுப்பதற்காக, உங்கள் குழந்தையுடன் Role-play செய்து பழகுங்கள். அதாவது நீங்களும் உங்கள் குழந்தையுடன் பள்ளியில் படிப்பதாகவும், உங்கள் குழந்தை உங்களை bully செய்வதாகவும் ஒரு கற்பனை விளையாட்டு செய்து பாருங்கள். தன் நிலைமையில் தன் பெற்றோர்கள் இருக்கும் போது அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று உங்கள் குழந்தை தெரிந்து கொள்ளும்.

இவை தவிர இன்னும் பல நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள www.aacap.org வலைத்தளத்துக்கு செல்லுங்கள்.

5 comments:

சேதுக்கரசி said...

பெற்றோர் அனைவரும் வாசிக்கவேண்டிய அருமையான பதிவு.

சேதுக்கரசி said...

நீங்கள் மறுமொழி மட்டுறுத்தலும், தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் திரட்டப்படவும் ஏற்பாடு செய்யவில்லை போலும். அவசியம் செய்யவும்.

Bharathi said...

நன்றி! புது தமிழ்மணத்தின் டூல்பாரை இன்னும் என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. மறு மொழி செய்வது default-ஆக இருக்கும் என்று தான் தமிழ்மணம் வழிமுறை புத்தகத்தில் உள்ளது. ஆனாலும் மறுமொழி செய்வதில் சிரமங்கள் உள்ளது. தமிழ்மணத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி பார்க்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஆகா. மிகச் சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள். இப்போதே அந்த வலைப்பக்கத்திற்குப் போய் படிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

பாரதி. தமிழ்மண விதிகளின் படி நீங்கள் மறுமொழி மட்டுறுத்தல் (Comments Moderation) செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் உங்கள் பதிவுகள் 'மறுமொழியப்பட்ட' பட்டியலிலும் வரும்படி செய்வார்கள். அப்படி மட்டுறுத்தல் ஏற்பாட்டைச் செய்ய உங்கள் ப்ளாக்கில் 'Settings --> Comments --> Enter a email address for comment Moderation' போய் செய்யுங்கள்.

அதிகத் தகவல்கள் வேண்டுமென்றால் என் ப்ரொபைல் பார்த்து ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...