Monday, September 04, 2006

பணத்தை சேமிக்க பல வழிகள்

இதில் உள்ள பெரும்பாலான கருத்துக்கள் உலகம் முழுதும் பொருந்தும். அமெரிக்காவிற்கு மட்டும் பொருந்த கூடிய கருத்துகளில் (US) என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

1. தேவையில்லாத கட்டணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக உங்கள் ATM network-க்கு வெளியே உள்ள ATM-லிருந்து பணம் எடுக்காதீர்கள். உங்கள் வங்கி மாதாந்திர கட்டணம் வசூலித்தால் அது போன்ற கட்டணம் இல்லாத கணக்குக்கு மாறுங்கள் அல்லது வங்கியை மாற்றுங்கள்.

2. உங்கள் வங்கியில் automatic bill pay வசதி இருந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள். பெரும்பாலான வங்கிகளில் இந்த வ்சதி இலவசம். கிரடிட் கார்டு late fee-ஐ தவிர்க்கலாம்.

3. உங்கள் வீட்டுக்கு loan வாங்கியிருந்தால் refinance செய்வதன் மூலம் வட்டி விகிதத்தை குறைக்க முடியுமா என்று பாருங்கள்.

4. உங்களுக்கு கல்லூரி லோன் பல வங்கிகளில் இருந்தால் அத்தனை லோன்களையும் ஒரே லோனாக ஒரு வங்கியில் வாங்குவதன் மூலம் பணம் மிச்சமாகும்.

5. கிரடிட் கார்டு பில், வங்கி ஸ்டேட்மென்ட் போன்றவற்றை அப்படியே குப்பையில் போடாதீர்கள். Shredder-ல் போட்டால் identity theft-ஐ தவிர்க்கலாம். உங்களிடம் shredder இல்லையென்றால், முக்கியமான பேப்பர்களை எட்டு பங்காக கிழித்து அவற்றை வெவ்வேறு குப்பை கூடைகளில் போடுங்கள். (இந்த தொல்லைக்கு பேசாமல் shredder-ஐ வாங்கி விடலாம்)

6. உங்களுக்கு தேவையில்லாமல் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் பழைய சாமான்களை விற்று விடுங்கள். Garage sale போடலாம் அல்லது Classifieds இணைய தளங்களில் விற்கலாம்.

7. உபயோகம் செய்யாத நேரங்களில் லைட் பல்புகளை off செய்யுங்கள்.

8. உங்கள் TV Cable-க்கு எவ்வளவு செலவாகிறது என்று கணக்கு பாருங்கள். 100 சேனல்களை வைத்துக் கொண்டு வெறும் CNBC மட்டும் பார்த்து கொண்டிருந்தால் உங்கள் cable plan-ஐ மாற்றி பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. செல் போனில் குறைவாக பேசுங்கள். குறிப்பாக SMS அனுப்பும் முன் எவ்வளவு கட்டணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் சில டிவி சேனல்களுக்கு அனுப்பும் SMS-களின் கட்டணம் அதிகம்.

10. மருந்துகளை மாதக்கணக்கிற்கு வாங்குவதாக இருந்தால் mail-order prescription program மூலம் வாங்குங்கள். (US)

11. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் முன் Comparison shopping sites-களில் ஆராய்ச்சி செய்து எந்த கம்பெனியில் குறைவான விலை என்று பார்த்து வாங்குங்கள். இது போன்ற தளங்களில் வாடிக்கையாளர்களின் feedback-ம் இருப்பதால் நிறுவனங்களின் சேவை தரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

12. Best Buy, Tiger direct போன்ற கடைகளின் online coupons-ன் மூலமாக குறைந்தது 5% மிச்சப்படுத்தலாம். இந்த தளங்களிலேயே கூப்பன் உள்ளது. இல்லாவிடில் கூகிளில் தேடிப்பாருங்கள். (US)

13. கிரடிட் கார்டை தேர்ந்தெடுக்கும் போது rewards உள்ள கார்டுகளை வைத்துக் கொள்வது நல்லது. பல வருடங்களாக Yahoo Visa கார்டை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு டாலருக்கும் ஒரு பாய்ன்ட் தருகிறார்கள். 10,000 பாய்ன்ட்கள் சேர்ந்தால் 100 டாலருக்கான கூப்பன் இலவசம். கடந்த சில வருடங்களில் நான் வாங்கிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சில இந்த கிரடிட் கார்டு மூலம் இலவசமாக கிடைத்தவை.

14. விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முன் Consumer Reports போன்ற பத்திரிகைகளை படித்து தரமுள்ள பொருட்களை வாங்குங்கள். (US)

15. பசியுடன் இருக்கும் போது shopping செய்யாதீர்கள். கண்ணில் படும் அத்தனை சாப்பாட்டு பொருட்களை வாங்க தோன்றும்.

16. இந்த கருத்தை சம்பந்தப் பட்டவர்கள் அலட்சியப் படுத்த போகீறார்கள். இருந்தாலும் சொல்கிறேன்: சிகரெட், ஆல்கஹால் போன்றவற்றை நிறுத்தினாலே வருடத்திற்கு பல்லாயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தலாம்.

17. There is no free lunch. இருந்தாலும் free lunchக்கு ஒரு வழி உள்ளது. US-ல் 0% வட்டி கிரடிட் கார்டுகள் சில உள்ளது. இவற்றில் ஒன்றை வாங்கி கிரடிட் கார்டிலிருந்து பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்து Netbank போன்ற வங்கிகளில் CD-ல் முதலீடு செய்தால் கிடைக்கும் அத்தனை வட்டியும் லாபம். Discover card ஒன்று 0% வட்டிக்கு ஒரு வருடத்துக்கு கிடைத்தது. $8,000 லிமிட் கொடுத்தார்கள். அந்த எட்டாயிரம் டாலரையும் பேலன்ஸ் டிரான்ஸ்பர் செக் மூலம் என் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்டேன். NetBank-ல் ஒரு வருட CDக்கு 4.85% வட்டி கொடுத்தார்கள். Discover card-லிருந்து கிடைத்த எட்டாயிரத்துக்கு வேறு எந்த கட்டணமும் (Ex: Balance transfer fee) கிடையாது. இதில் ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் ஒரு வருடம் முடியும் போது மொத்த பணத்தையும் மறக்காமல் Discover card-க்கு கட்டி விட வேண்டும். இல்லையென்றால் வட்டி விகிதம் 0% லிருந்து 18%க்கு எகிறி போய் விடும்.

18. சம்பளத்திலிருந்து பணத்தை நேரடியாக சேமிப்பில் போடுங்கள். US-ல் வசிப்பவராக இருந்தால் 401kல் பணத்தை முதலீடு செய்யுங்கள். நம்மவர்கள் அதிகமாக இருக்கும் பெரும்பாலான நாடுகளில் automatic investment plans உள்ளது. இவற்றின் மூலம் பணம் நம் கைக்கு வராமல் நேராக சேமிப்புக்கு அல்லது முதலீட்டுக்கு போய் விடும்.

12 comments:

Ravo said...

Excellent tips.

Thank you.

Bharathi said...

You are welcome... and thank you for the feedback.

இவன் said...
This comment has been removed by a blog administrator.
இவன் said...

என்னைப் போல் அமெரிக்கா புதிதாக வந்தவர்களுக்கு தேவையான செமிப்பு வழிமுறைகள் இவை. மிக்க நன்றி பாரதி.

Bharathi said...

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. Good Luck!

குமரன் (Kumaran) said...

ரொம்ப நாளாச்சு பாரதி உங்கள் பதிவிற்கு வந்து. தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகளை இடுவதில்லையா? தமிழ்மணத்தில் அண்மையில் பார்த்ததாக நினைவில்லையே?

நல்ல குறிப்புகளா இங்கே சொல்லியிருக்கீங்க. நன்றிகள்.

Bharathi said...

வணக்கம் குமரன்! தமிழ்மணத்தில் சில ஸ்க்ரிப்ட்டுகளை மாற்றி விட்டார்கள். அதனால் "பரிந்துரை" செய்யும் வசதி போய்விட்டது. மாற்று ஸ்கிரிப்டை தேடி எடுத்து இந்த பிளாக்கில் போட சோம்பேறித்தனம்! உங்கள் பின்னோட்டத்தை பார்த்த பிறகு தமிழ்மணத்தில் என் பெயர் இருக்கிறதா என்று செக் செய்தேன். பெயரையே காணோம்! காசிக்கு என்ன கோபமோ!! அவருக்கு ஒரு மின்னஞ்சல் தட்டி விடுகிறேன். தங்கள் உதவிக்கு நன்றி!

குமரன் (Kumaran) said...

தமிழ்மணத்தைக் காசி விற்று பல நாட்கள் ஆகிறது பாரதி. இப்போது ஒரு நிறுவனம் தமிழ்மணத்தை நடத்துகிறது. உங்கள் பதிவு இப்போது தமிழ்மணப் பட்டியலில் வந்துவிட்டது. அதனைப் பார்த்து தான் இப்போது உள்ளே வந்தேன். விரைவில் தமிழ்மணப் பட்டியையும் இணைத்துவிடுங்கள். மறுமொழி மட்டுறுத்தலையும் செய்துவிடுங்கள். மீண்டும் உங்களது பயனுள்ள பதிவுகள் தமிழ்மணத்தில் வலம் வரும். மிக்க நன்றி.

Bharathi said...
This comment has been removed by a blog administrator.
Bharathi said...
This comment has been removed by a blog administrator.
Bharathi said...

குமரன், எனக்கு இது புது செய்தி! ஆரம்பித்த சில மாதங்களிலேயே flip செய்து விட்டாரா? ஆச்சர்யமாக இருக்கிறது. யார் வாங்கியிருக்கிறார்கள்? இதைப்பற்றிய லிங்க் ஏதாவது இருந்தால் தமிழ்நிதி@ஜிமெயிலுக்கு அனுப்பி வையுங்கள், ப்ளீஸ்.

மறுமொழி code-ஐ வைப்பதை பற்றிய தமிழ்மணத்தின் விளக்கம் சுத்தமாக புரியவில்லை. திரும்பவும் படித்து பார்க்கிறேன். (சில வார்த்தைகளை கஷ்டப்பட்டு தமிழில் மொழி பெயர்க்காமல் ஆங்கிலத்தில் எழுதினால் படிக்க சுலபமாக இருக்கும்!)

உங்கள் பின்னூட்டத்தை பார்த்தபிறகு தான் தமிழ்மணம் இந்த பதிவை மறந்து விட்டது தெரிய வந்தது. மிக்க நன்றி!

mohamed sadiq said...

payanulla thagavl(nandri)

Related Posts Plugin for WordPress, Blogger...