Thursday, August 31, 2006

ரிமோட் பார்க்கிங்

காரிலிருந்து கொண்டே ரிமோட் மூலமாக கராஜ் கதவை திறப்பது என்பது எல்லோரும் செய்கிறார்கள் – என் போல ஆட்களை தவிர. எப்போதும் அபார்ட்மென்ட்டிலே வசிப்பதால் எனக்கு அந்த luxury இன்னும் கிடைக்கவில்லை. இப்போது சில கார்களில் ரிமோட் மூலமாக காரை பார்க் செய்வதே சாத்தியமாகி உள்ளது.



காரை எங்கே நிறுத்த வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அந்த இடத்துக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு, காரிலிருந்து இறங்கி ரிமோட் மூலமாகவே காருக்கு கமாண்ட் கொடுத்தால் கார் தன்னைத்தானே நிறுத்திக் கொள்ளும். மனிதர்கள் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு எவ்வளவு தள்ளாடுகிறார்கள். கார்கள் அந்த வேலையை அநாயசமாக செய்ய ஆரம்பித்து விட்டன. சில luxury கார்களில் தான் இந்த வசதி இப்போது உள்ளது. இன்னும் சில வருடங்களில் கரோல்லா போன்ற கார்களில் கூட இந்த வசதி கிடைக்க வாய்ப்புள்ளது. காரை பார்க் செய்யக் கூடவா டெக்னாலஜி தேவைப்படுகிறது என்று எனக்குள்ளே நான் முணுமுணுத்தாலும் சான் பிரான்சிஸ்கோ நகர சாய்வு சாலைகளில் பேரலல் பார்க்கிங் செய்வதற்கு இந்த டெக்னாலஜி உதவினால் பரவாயில்லை.

5 comments:

சனியன் said...

வேண்டுமென்றால் இப்போதிருந்தே பழகிக் கொள்ளுங்கள். ரிமோட் வந்ததற்கப்புறம் சவுகரியமாயிருக்கும்.

http://www.107.peugeot.co.uk/peugeot.swf

Bharathi said...

நன்றி! நீங்கள் கொடுத்த link நன்றாக உள்ளது. ஒரு நிமிடம் முயற்சி செய்தேன். இரு முறை பின் உள்ள காரை இடித்து விட்டேன். நாளை திரும்ப முயற்சிக்கிறேன்.

Anonymous said...

hi bharathi, i like ur blog.

good work. pharases like writer sujatha. then iam interested in investing shares. so ur is useful to me.

Haritha
jayan_me@yahoo.com

Anonymous said...

i want ur original photo sir.

haritha

Bharathi said...

Haritha, Thank you very much! Feedback like this really encourage the writers.

Reg. photo: You will start disliking this blog if you see my photo here! I don't want to scare other readers, I will send it to your email address.

Related Posts Plugin for WordPress, Blogger...