Thursday, August 31, 2006

ரிமோட் பார்க்கிங்

காரிலிருந்து கொண்டே ரிமோட் மூலமாக கராஜ் கதவை திறப்பது என்பது எல்லோரும் செய்கிறார்கள் – என் போல ஆட்களை தவிர. எப்போதும் அபார்ட்மென்ட்டிலே வசிப்பதால் எனக்கு அந்த luxury இன்னும் கிடைக்கவில்லை. இப்போது சில கார்களில் ரிமோட் மூலமாக காரை பார்க் செய்வதே சாத்தியமாகி உள்ளது.



காரை எங்கே நிறுத்த வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அந்த இடத்துக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு, காரிலிருந்து இறங்கி ரிமோட் மூலமாகவே காருக்கு கமாண்ட் கொடுத்தால் கார் தன்னைத்தானே நிறுத்திக் கொள்ளும். மனிதர்கள் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு எவ்வளவு தள்ளாடுகிறார்கள். கார்கள் அந்த வேலையை அநாயசமாக செய்ய ஆரம்பித்து விட்டன. சில luxury கார்களில் தான் இந்த வசதி இப்போது உள்ளது. இன்னும் சில வருடங்களில் கரோல்லா போன்ற கார்களில் கூட இந்த வசதி கிடைக்க வாய்ப்புள்ளது. காரை பார்க் செய்யக் கூடவா டெக்னாலஜி தேவைப்படுகிறது என்று எனக்குள்ளே நான் முணுமுணுத்தாலும் சான் பிரான்சிஸ்கோ நகர சாய்வு சாலைகளில் பேரலல் பார்க்கிங் செய்வதற்கு இந்த டெக்னாலஜி உதவினால் பரவாயில்லை.

Monday, August 14, 2006

இந்திரா நூயி

கேட்க சந்தோஷமாக இருக்கிறது. நம் ஊர் பெண்மணி பெப்ஸியின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு மகத்தான சாதனை. சென்னையில் பிறந்து வளர்ந்து, படித்து அமெரிக்காவின் வெள்ளையர்களுக்கு நடுவே சாதாரண வேலை பார்ப்பதே கொஞ்சம் கடினம். Glass Ceiling என்பது நிதர்சனமான உண்மை. இந்த சூழ்நிலையில் CEO நிலைக்கு இந்திரா உயர்ந்திருக்கிறார், அதுவும் பெப்ஸி போன்ற நிறுவனத்தில். My Hearty Congratulations to you Mrs. Nooyi!

சில மாதங்களுக்கு முன்னால் கொலம்பியா கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இந்திரா உரையாற்றினார். சுத்தமாக சொதப்பி விட்டார். அமெரிக்காவை நடு விரலுக்கு ஒப்பிட்டு பேசி பெரிய ரகளையாகி விட்டது. (அமெரிக்காவில் நடு விரலை உயர்த்தி காண்பித்தால் நம் ஊர் சேரி வார்த்தைகளை வாய் திறந்து சொல்லாமலே சொல்வதற்கு சமம்). இந்திரா இந்தியாவில் பிறந்ததால் தான் இப்படி பேசி விட்டார் என்று அமெரிக்க மாணவர்கள் கொதித்து எழுந்து விட்டார்கள். விபரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

இந்த ஒரு நிகழ்ச்சியினால் இந்திராவுக்கு CEO பதவி கிடைப்பது சந்தேகம் தான் என்று நினைத்திருந்தேன். இதை பெரிது செய்யாமல் பெப்ஸி போர்டு முதிர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறது. இதே போன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால், பெப்ஸிக்கு பதிலாக டாடா சன்ஸ், இந்திராவுக்கு பதிலாக ஒரு அமெரிக்கர் என்று இடங்கள் மாறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! மரங்களை வெட்டி, வெட்டி வேலைகள் செய்த ஒருவர் முகம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...