Friday, March 31, 2006

ஒளிமயமான எதிர்காலம்

நான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு. கல்லூரி முடித்த சில மாதங்களில் சென்னை சோழாவில் "சிங்கப்பூரில் வியாபாரம் செய்து வெற்றி பெறுவது எப்படி?" என்று ஒரு கருத்தரங்கம் நடந்தது. மூன்று நாட்கள் கருத்தரங்கத்தில் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் சிங்கப்பூரில் எந்த தொழிலும் தொடங்க வில்லை. ஆனாலும் வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற துடிப்பவர்களுடன் சேர்ந்து சில விஷயங்களை கற்றுக் கொண்டது பிற்காலத்தில் உபயோகமாக இருந்தது.

இப்போது காலம் மாறி விட்டது. இந்தியாவில் வியாபாரம் செய்வது பற்றி சிங்கப்பூரில் கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.



இந்தியாவின் எதிர்காலம் மிக பிரகாசகமாக இருக்கும் என்று உலகத்தில் உள்ள அத்தனை கன்சல்டன்ஸிகளும் ஒருமித்த குரல் கொடுத்திருப்பதால் வந்த நம்பிக்கை. பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோஷமாக இருக்கிறது.

கலிபோர்னியா மாநிலத்தில் சான்டா கிளாரா நகரத்தில் இன்று (ஏப்ரல் 6) இதே போன்ற ஒரு கருத்தரங்கம் (“Next Generation Outsourcing & the Coming Wave in India”) நடந்தது. டிக்கெட்டுகள் அத்தனையும் திங்களன்றே விற்று விட்டது!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...