Sunday, January 08, 2006

Google மேனியா - Update

கூகுள் பங்குகள் பறப்பதை நிறுத்தவில்லை. நவம்பர் 5, 2005-ல் கூகுளை பற்றி எழுதியபோது பங்குகளின் விலை $390. இன்று $465! ஜிம் கிரேமர் சொன்ன $450 விலையை கடந்து விட்டது.

கடந்த 60 நாட்களில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது.

1. கூகுள் America Online நிறுவனத்தின் 5% உரிமையை வாங்கிவிட்டது. கூகுளின் பெரிய வாடிக்கையாளர் America Online. பங்கு சந்தை முதலீட்டாளர்கள் இதில் ரொம்ப த்ரில்லாகி விட்டார்கள்.

2. கூகுள் புதிதாக Video-on-demand போன்ற சேவைகளை ஆரம்பித்து விட்டது

3. குறைந்தது மூன்று வங்கிகள் கூகுள் பங்குகள் $500 மதிப்பை எட்டும் என்று கணித்து விட்டார்கள்

ஜனவரி 20ம் தேதிவாக்கில் கூகுள் லாப நஷ்ட கணக்கை அறிவிக்க போகிறது. அதில் கூகுள் ஏதாவது ஏமாற்றத்தை கொடுத்து விட்டால் பெரிய பிரச்னை ஆகிவிடும். அப்படியெல்லாம் நடக்காது என்று நம்பிக்கை இருந்தாலும் நான் ரிஸ்க் எடுக்க போவதில்லை. ஜனவரி 20க்குள் நான் வாங்கிய ஆப்ஷன்கள் அனைத்தையும் விற்க போகிறேன். ஒரு வேளை கூகுளின் லாப கணக்கு திருப்திகரமாக இருந்தால் ஜனவரி நாலாவது வாரத்தில் திரும்பவும் ஏப்ரல் மாதத்துக்கான கூகுள் ஆப்ஷன்களை வாங்க வேண்டியது தான்.

நீங்கள் கூகுள் ஆப்ஷன்களை வாங்கியிருந்தால் உங்கள் லாபத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

4 comments:

இளந்திரையன் said...

அருமையான பதிப்பு பாரதி . நான் கனடாவில் இருக்கின்றேன். இங்கு உதவக் கூடிய தகவல்களையும் தருவீர்களா ? எனது புளக்கில் உங்கள் லிங்கும் கொடுத்துள்ளேன்.

Bharathi said...

இளந்திரையன்: நன்றி! கனடா சந்தையை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. Sorry. கனடாவில் இருப்பதால் உங்களால் அமெரிக்க சந்தையில் முதலீடு செய்ய முடியும். RIMM போன்ற நிறுவனங்களை தவிர கனடா நிறுவனங்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

இளந்திரையன் said...

நன்றி பாரதி .தேவைபடும் போது உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன். உங்கள் ஆக்கங்கள் பல விடயங்களை அறிய உதவுகின்றது. தொடர்ந்தும் எழுதுங்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனதும் எனது குடும்பத்தவர்களினதும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Bharathi said...

இளந்திரையன், நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...