Monday, January 16, 2006

சிறு துளி....

சில வருடங்களுக்கு முன்னால் விளையாட்டாக ஆரம்பித்த விஷயம், இன்று பயனுள்ளதாய் இருக்கிறது.

என் வீட்டு சமையலறையில் ஒரு சில்லரை பெட்டி இருக்கும். கடைகளில் பொருள்கள் வாங்கிய பிறகு கிடைத்த சில்லரைகள் எல்லாம் இந்த பெட்டிக்கு சென்று விடும். ஒரு நாள் இந்த பெட்டி நிரம்பி வழிந்த போது அதில் உள்ள காலணா, எட்டணா காசுகளை எடுத்து பொட்டலம் கட்டி வங்கியில் நோட்டாக மாற்றும் போது அந்த யோசனை வந்தது.

"இந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல் பங்குகளில் போட்டால் என்ன?"

பல மாதங்களாக சில்லரை பெட்டி காலி செய்யாமல் இருந்ததால் எழுபது டாலருக்கு மேலே பணம் கிடைத்தது. வெறும் எழுபது டாலருக்கு பங்குகள் வாங்குவதா என்று தோன்றினாலும் அந்த எழுபது டாலரை வைத்து Sharebuilder வலை தளத்தில் ஒரு கணக்கு ஆரம்பித்தேன்.

Sharebuilder தளத்தில் ஒரு டிரேடுக்கு வெறும் நாலு டாலர் மட்டுமே கமிஷன் வாங்குகிறார்கள். அடிக்கடி டிரேடு செய்வதற்கு இவர்கள் அருகில் போக மாட்டேன். நான் செய்ய ஆரம்பித்ததே கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி வேலை! எனக்கு உபயோகமில்லாமல் சும்மா கிடக்கும் சில்லரை காசுகள் எந்த அளவுக்கு லாபம் தரும் என்று யோசித்ததால் வந்த விளைவு இது. அதே சமயம் Long-term-ல் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் எப்படி இருக்கும் என்றும் யோசித்தேன். Long-term என்றால் குறைந்தது 10 வருடங்கள். இந்த முயற்சிக்கு தனியாக தரகர் கணக்கு தொடங்கினால் track செய்ய சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அது தவிர இந்த விளையாட்டுக்கு என்னிடம் இருந்ததே வெறும் 70 டாலர் தான், அதை வைத்துக் கொண்டு Brown & Co., அருகே போக முடியாது. அதனால் தான் Sharebuilder.

இது நடந்தது பிப்ரவரி 2001-ல். கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஓடி விட்டன. ஆறு மாதத்துக்கு ஒரு முறை சில்லரை பெட்டி காலி செய்யப்பட்டு, வங்கியில் பணமாக மாற்றப்பட்டு, Sharebuilder-ல் டெபாசிட் செய்யப்பட்டது. இப்போது இந்த கணக்கின் மதிப்பு $1100!

பங்குகளை தேர்வு செய்த விதமும் இந்த கணக்கின் மதிப்பு உயர ஒரு காரணம். இந்த கணக்கில் உள்ள பங்குகள்:

5 CSCO பங்குகள்
5 GE பங்குகள்
1.16 GOOG பங்குகள்
5 MSFT பங்குகள்
5 QQQQ பங்குகள்

Sharebuilder போன்ற தரகர்களிடம் 0.5 பங்கு கூட வாங்க முடியும். அதனால் என்னிடம் வெறும் $18 இருந்தால் கூட 0.5 MSFT பங்கு வாங்க முடியும்.

இது வரை இந்த கணக்கில் பங்குகளை வாங்குவதோடு சரி, விற்கும் வேலையே கிடையாது. 2012 பிப்ரவரியில் இந்த கணக்கின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. ஆனால் அது வரை இந்த வலைப்பதிவு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்!

11 comments:

தமிழ்பயணி said...

இவ்வளவு முன்யோசனையுடன் திட்டமிட்டு செய்யும் போது கட்டாயம் 2012ல் இன்றைக்கு நவீன தொழில் நுட்பத்தில் தெரிவிப்பீர்கள்.

Bharathi said...

நன்றி!

ஊமை said...

பாரதி,

ARRahman பற்றிய செய்தியைப்படிக்க வந்தபோது உங்கள் மற்ற பதிவுகளைப்படிக்க முடிந்தது. பயனுள்ளவை. தொடருங்கள். இப்போதுதான் shares பற்றித் தெறிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இப்போது உங்கள் blog மூலம் நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி.

ஊமை said...
This comment has been removed by a blog administrator.
Bharathi said...

Thanks for the feedback. I got the email with your comment, but it was removed by you for some reason. Anyway, let me give couple of pointers on the discount brokers. I use brownco.com and optionsxpress.com; I am seriously thinking of exploring thinkorswim.com; If you use sharebuilder for real-time trading, they charge a lot. I don't do that. I use $4 option, they buy the shares in bulk on someday and some price in a week. If you go to sharebuilder.com, they have detailed explanation of how the trade works for real-time versus bulk buying by them. Hope this helps.

ஊமை said...

நன்றி பாரதி,

உங்கள் தொடரிலேயே எனது கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்தது. அதனால்தான் comments அழித்துவிட்டேன்.brownco - etrade உடன் இணைந்துவிட்டது போலும். புதிதாக கணக்கு ஆரம்பிக்க etrade க்கு வழி காட்டுகிறது. thinkorswim.com சென்று பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

Bharathi said...

நன்றி. Good Luck!

Anonymous said...

nice post....thanks

Bharathi said...

Thanks for the feedback.

மங்களூர் சிவா said...

//
2012 பிப்ரவரியில் இந்த கணக்கின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. ஆனால் அது வரை இந்த வலைப்பதிவு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்!
//

hi it is very interesting.

Making rules are easy but sticking with that is difficult.

me too a investor cum trader for the past two and half year.

I hope you will make very good money by those time. god bless us.

Bharathi said...

Thank you Siva..

Related Posts Plugin for WordPress, Blogger...