Sunday, December 25, 2005

தங்கமே தங்கம்!

தங்கம் விலை கூரையை பிய்த்துக் கொண்டு போய்கிறது! இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

இன்னும் ஒரு வருடத்தில் விற்று லாபம் பார்ப்பதற்காக வாங்கினால் அது கொஞ்சம் ரிஸ்க்கான சமாசாரம் தான். 2006 இறுதிக்குள் இன்னும் 5% விலை ஏறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதலில் தங்கம் விலை ஏன் அதிகமாகிறது என்பதை பார்ப்போம்.

1. நம் நாட்டிலும் சீனாவிலும் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டு போகிறது. இரண்டு நாடுகளிலும் தங்கம் ஒரு கௌரவ அடையாளம். தங்கள் வாழ்க்கை தரம் மாறியதை மற்றவர்களுக்கு காண்பிக்க தங்கம் பயன்படுகிறது.

2. அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் என்று நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள். டாலர் விலை குறைந்தால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் தங்கத்தின் demand அதிகமாகும், அதன் விளைவாக தங்கத்தின் விலை கூடும்.

3. மேலே சொன்ன காரணங்களுக்காக Hedge Fund நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கத்தின் மேல் மோகம் கொண்டு அலைகிறார்கள்.

தங்கத்தில் லாபம் பார்ப்பதற்காக அதை நீங்கள் வாங்குவதாக இருந்தால் உங்களின் மொத்த முதலீட்டில் 5% - 10% பணத்தை மட்டும் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். தங்கம், சில்வர், காப்பர் மற்றும் பல உலோகங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது இன்னும் பாதுகாப்பானது. தங்கத்தின் விலை சரிந்தாலும் மற்ற உலோகங்கள் Hedge போல இருந்து மொத்த முதலீட்டையும் காப்பாற்றும்.

அமெரிக்க சந்தையில் உங்களால் முதலீடு செய்ய முடிந்தால் கீழ்க்கண்ட பரஸ்பர நிதிகள் உதவும்.

Vanguard Precious Metals and Mining (VGPMX)
USAA Precious Metals and Minerals (USAGX)

4 comments:

வாசன் said...

மீண்டுமொரு பயனுள்ள பதிவு பாரதி. நன்றி.

நடப்பு ஆண்டு முடிய சில நாட்களே இருக்கும் இச்சமயத்தில், வருமான வரியை குறைவாக்க IRA போட வேண்டியிருக்கும். வேன்கார்டில் பரஸ்பர நிதிகளை ஐந்தாறு உள்ளது. நீங்கள் சொல்லியிருக்கும் தங்கம் தொடர்பான vanguard ப.நிதி ira தெரிவு செய்ய உதவும்.

Bharathi said...

வாசன், நன்றி.

குமரன் (Kumaran) said...

பாரதி. ஒரு வாரத்திற்கு முன்னர் தான் வீட்டில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீண்ட கால முதலீடாய் ஒரு 5% தங்கத்தில் முதலீடு செய்யலாமா? உங்கள் எண்ணம் என்ன?

Bharathi said...

குமரன்: நிச்சயமாக! நீண்ட கால முதலீட்டுக்கு தங்கம் சிறந்தது. நீண்ட காலம் என்றால் குறைந்தது 5 வருடங்கள். அமெரிக்க தங்க காசுகளை வாங்க வேண்டாம். இந்தியாவில் வாங்குவது நல்லது.

Related Posts Plugin for WordPress, Blogger...