Monday, December 05, 2005

ஹை-டெக் விவசாயி

கடலூருக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் திருப்பாபுலியூர். தமிழரசன் அந்த ஊரில் விவசாயம் செய்கிறார். தனது பத்து ஏக்கர் நிலத்திலும் வெங்காயம் பயிரிட்டிருக்கிறார். தன் நிலத்தையும் பயிரையும் கண்காணிக்க அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை.

தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து தனது லேப்டாப் கம்ப்யூட்டரின் மூலம் தன் நிலத்தின் ஈரப்பதத்தை செக் செய்ய முடியும். தன் வயல் வரப்பின் எல்லைகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க முடியும். பிடிக்காதவன் மாடு தன் நிலத்துக்குள் புகுந்தால் கொஞ்சமாக ஷாக் கொடுத்து விரட்ட முடியும். பிடிக்காதவன் நுழைந்தால் அவனுக்கும் ஷாக் கொடுக்கலாம், ஆனால் அரசாங்கம் அனுமதிக்காததால் ஒலி பெருக்கி மூலம் பேசி விரட்ட முடியும். தமிழரசனின் வயலை சுற்றி போடப் பட்ட வேலியில் ஆங்காங்கே
ஒலிபெருக்கிகளும் வெப் கேமராக்களும் பொருத்தப் பட்டிருக்கின்றன.

தமிழரசன் தன் நிலத்தின் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட முடியும், அவர் நிலத்தில் கால் வைக்காமல். தன் பயிரை வாங்கும் நிறுவன அதிகாரிகளுடன் மின்னஞ்சலில் வியாபாரம் பேச முடியும். இன்று சென்னையில் வெங்காயம் என்ன விலை விற்கிறது, தன்னிடம் வெங்காயம் வாங்கும் நிறுவனம் தன்னை ஏமாற்றுகின்றதா என்பதையெல்லாம் சில பட்டன்களை தட்டி அவரால் திரிந்து கொள்ள முடியும்.Wi-Fi தொடர்பும், லேப்டாப் கம்ப்யூட்டரும் அவருக்கு உதவி செய்கிறது.

Wi-Fi தொடர்பின் மூலம் தன் நிலத்தின் ஒவ்வொரு சதுர அடியையும் தமிழரசனால் கண்காணிக்க முடிகிறது. தன் கிராமத்தில் சுனாமியாலோ பலத்த மழையினாலோ பாதிப்பு ஏற்பட்டால் வெளி உலகத்துடனும் மற்ற விவசாயிகளுடனும் தொடர்பு கொள்ள Wi-Fi தொடர்பு அவருக்கு உதவுகிறது.

ம்...கேட்கவே நன்றாக இருக்கிறது. அமெரிக்காவில் Oregon மாநிலத்தில் உள்ள Hermiston என்ற சின்ன கிராமத்தில் (மக்கள் தொகை 11,000) இது நிஜமாகி விட்டது. Subway என்ற உணவகத்தில் பயன்படுத்தப்படும் சிவப்பு வெங்காயங்கள் Wi-Fi தொடர்பின் உதவியால் இந்த கிராமத்தில் பயிர் செய்யப்பட்டவை.

இன்னும் சில வருடங்களில் இந்த கனவு இந்தியாவிலும் நனவாகும். DSL அல்லது கேபிள் மூலம் கிடைக்கும் இன்டர்நெட் தொடர்பின் விலையை விட Wi-Fi தொடர்பின் விலை குறைவு. ஏற்கனவே நம் ஊரில் விலை மலிவான கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தி விட்டார்கள். வட இந்தியாவில் சில கிராமங்களில் விவசாயிகள் கம்ப்யூட்டரின் மூலம் தன் பயிர்களை எந்த விலைக்கு விற்கலாம் என்று தீர்மானிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருந்தால் நம் ஊர் விவசாயிகள் கம்ப்யூட்டரின் மூலம் பயிர் செய்வார்கள். "காலத்தே பயிர் செய்" என்ற சொல் மாறி "கம்ப்யூட்டரே..பயிர் செய்" என்றாகி விடும்.

இது போல நடக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் ஆசைப்படுகிறேன். என் மேனேஜரின் தொல்லை தாங்கவில்லை. கோயம்பத்தூர் பக்கம் ஒரு கிராமத்தில் போய் செட்டிலாகி, திண்ணையில் உட்கார்ந்து லேப்டாப்பின் உதவியால் விவசாயம் செய்யலாம். மாலை நேரங்களில் போரடித்தால் நாஸ்டாக்கில் கொஞ்சம் பணம் செய்யலாம். ஒரு பக்கம் விவசாயம், இன்னொரு பக்கம் கூகுளும் மைக்ரோசாப்டும். இது எப்படி இருக்கு?!

குறிப்பு: ஆப்ஷனின் அடுத்த பாகத்தை எழுதுகிறேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டே இருக்கிறேன். எல்லோரும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி இன்னும் சரியாக வரவில்லை. ஈ-கலப்பையும் இன்னும் சரிவர பிடிபட வில்லை. இன்னும் சில நாட்களுக்குள் அடுத்த பாகம் வந்து விடும்.

12 comments:

Agent 8860336 ஞான்ஸ் said...

//"காலத்தே பயிர் செய்" என்ற சொல் மாறி "கம்ப்யூட்டரே..பயிர் செய்" என்றாகி விடும்.

ஈ-கலப்பையும் இன்னும் சரிவர பிடிபட வில்லை. //

இந்த ஈ-கலப்பை, நிலத்தை உழுது போடுமா?

;-)

Anonymous said...

asku busku

மஞ்சூர் ராசா said...

சரியா தானே இகலப்பையாலெ உழுதிருக்கே, இன்னும் என்ன பிடிப்படலெ

நானும் கோவைப் பக்கம் வந்துடலாமான்னு இருக்கு

Bharathi said...

கலப்பையில் எழுத நிறைய நேரம் ஆகிறது. ஒரு பக்கம் எழுதவே ஒரு மணி நேரம் ஆகி விடுகிறது. அது தான் பிரச்னை.

Partha said...

someone was saying murasu was way better than kalappai. check it out...

மதுமிதா said...

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.

சில வருடங்களில் இந்தியாவில் நனவாகாது.
பல வருடங்கள் ஆகும்.

ஸ்டாக்மார்க்கெட்டில் ப்யூச்சர்& ஆப்ஷனில் விளைபொருட்கள் விற்பது வந்துவிட்டது உண்மைதான்.

நம் நாட்டில்தான் விளைபொருட்கள் பயிரிடுபவன் கொள்ளையடிக்கப்படுகிறானே?

மகேந்திரசிங் டிகாயத்து,நாராயணசாமி நாயுடு போன்ற தலைவர்கள் சொந்த நலன் கருதாது விவசாயிகளுக்காக போரடிய
காலங்கள் பொற்காலங்கள்.

நாற்காலி போதையில் ஆடிக்கொண்டிருக்கும் அரசியல் ஆட்டத்தில் நசுக்கப் பட்டுக்கொண்டிருப்பது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் அல்லவா?

நாங்க சேற்றில் கால் வச்சா தான்
நீங்க சோற்றில் கைவைக்க முடியும்-னு போராடுன பூமிய்யா இது.

விவசாயிங்க வாழ்க்கை நல்லா இருந்தா சரி

விவசாயிங்கள நினைவு கூர்ந்து
பொருட்டா மதிச்சு,கோ.கணேஷுக்குப் பிறகு நீங்க இட்ட பதிவ தான் பாக்கறேன்.

நன்றி பாரதி.

Bharathi said...

பார்த்தா: நன்றி. முரசிலும் முயற்சி செய்திருக்கிறேன். அதிலும் இதே கதை தான்!

மதுமிதா: நன்றி. உங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. கிராமத்து மக்கள் ரொம்பவும் புத்திசாலிகளாக மாறி விட்டால் அரசியல்வாதிகளுக்கு திண்டாட்டம் தான். அதனால் ஓரளவுக்கு மட்டும் அவர்கள் வாழ்க்கை நிலை உயர்ந்தால் போதும் என்பது தான் அரசியல்வாதிகளின் எண்ணம். நம் நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்திருக்கிறது. எத்தனை இன்போசிஸ் வெற்றி பெற்றாலும் நம் ஊர் விவசாயிகள் என்று வெற்றி பெறுகிறார்களோ அன்று தான் நாடு முழு சுபிட்சம் அடையும்.

Anonymous said...

நீங்க சொல்ற தொழில்நுட்பம் எல்லாம் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்குமான்னு தெரியலை. திருவண்ணாமலை பகுதியில் கரும்பு சாகுபடி செஞ்ச விவசாயிகள் அடிப்படை விலைகூட கிடைக்காம கஷ்டப்படுறாங்களாம். என் சிற்றறிவுக்கு எட்டியவரை தொழில்நுட்பங்களால் மட்டும் விவசாயியின் வாழ்க்கை உயர்ந்துவிடாது. விவசாயிகளுக்கு நன்மை செய்யும்படி மார்க்கெட் உள்பட் அத்தனை விஷயங்களும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

Bharathi said...

நன்றி. தொழில் நுட்பம் என்பது முதல் படி. அதனால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது, ஆனாலும் நிரந்தர தீர்வை நோக்கி நம்மை தள்ளும் catalyst அது.

வட இந்தியாவில் சில கிராமங்களில் விவசாயிகள் தொழில் நுட்பத்தின் பலனை அனுபவிக்கிறார்கள். அந்த நிலை இன்னும் சில வருடங்களில் நாடு முழுதும் வந்து விடும். I hope...

Arunram said...

Bharathi, indeed a great work by you. I have never had an idea of options before. You had blogged as if like a person talking to me personally. I have not yet fully understood whatever you had said. Planning to have a go at it once more. Ha, you have got repeat audience !!!

Arunram said...

Though you had written these in December 2005, by some links I had had a chance to read them now. Better late than never

Bharathi said...

Hi, Thank you for the feedback, I really appreciate it.

Related Posts Plugin for WordPress, Blogger...