Saturday, December 31, 2005

இந்தியாவில் வியாபாரம் செய்ய சில யோசனைகள்

மைக்ரோ கிரடிட் என்ற சமாசாரம் வளரும் நாடுகளில் "Hot topic" ஆகி விட்டது. உங்கள் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் இதில் இறங்கலாம். இந்த வியாபாரத்துக்கு வங்கியில் பணம் கடன் வாங்க முடியாது, ஏனென்றால் வங்கியே நீங்கள் தான்!

ஏழைகளுக்கு நியாயமான முறையில் கடன் வழங்கி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தான் மைக்ரோ கிரடிட்டின் வேலையே. இது வெறும் சமூக சேவை மட்டுமல்ல, லாபம் வரக்கூடிய நல்ல வியாபாரம் கூட. நீங்கள் போட்ட முதலீட்டுக்கு குறைந்தது 10% லாபம் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் நிறைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய புண்ணியமும் கிடைக்கும்.

வட்டிக்கு பணம் கொடுப்பதில் என்ன புண்ணியம் என்று டென்ஷனாவதற்கு முன்னால் இது முழுவதையும் படியுங்கள்!

நகரங்களில் வாழ்பவர்கள் புதிதாக வீடு வாங்க விரும்பினாலோ அல்லது 60" டிவி வாங்க விரும்பினாலோ அவர்களுக்கு கடன் கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். காரைக்குடி பக்கத்தில் உள்ள குக்கிராமத்தில் இருக்கும் ஒரு விதவை பெண்மணி கோழிப்பண்ணை வைக்க விரும்பினால் அவருக்கு யார் கடன் கொடுப்பார்கள்? அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு ஏழை விவசாயி உரம் வாங்க கடன் கேட்டால் யார் கொடுப்பார்கள்? தப்பி தவறி கடன் கிடைத்தாலும் கந்து வட்டி தான். சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்படும் ஏழைகளுக்கு உதவுவது தான் மைக்ரோ கிரடிட்டின் முக்கிய வேலையே. நியாயமான முறையில் வட்டி மற்றும் வாடிக்கையாளர்களை எடை போடும் திறமை இருந்தால் மைக்ரோ கிரடிட்டில் நீங்கள் ஜொலிக்கலாம்.

அன்றாடம் காய்ச்சிகளுக்கு கடன் கொடுத்து விட்டு கடனை வசூலிப்பதிற்குள் போதும் போதும் என்றாகி விடாதா? உண்மை என்னவென்றால் குக்கிராமங்களில் வசிக்கும் ஏழைகளில் பெரும்பாலானவர்கள் நாணயமானவர்கள், பழிச்சொல்லுக்கு
அஞ்சுபவர்கள். அதற்காக கடன் கேட்பவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்து விட முடியாது, அப்படி செய்தால் தலையில் மொட்டை தான்.

முதலில் உங்களுக்கு பரிச்சயமான கிராமத்தில் மைக்ரோ கிரடிட்டை ஆரம்பிக்க வேண்டும். பெண்களுக்கு மட்டும் கடன் கொடுக்க
ஆரம்பியுங்கள். ஆண்களுக்கு கொடுக்கும் பணம் சாராயக் கடை கல்லாவில் போய் விழும். (குக்கிராமங்களில் உள்ள ஆண்கள் இந்த பதிவை படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் எழுதுகிறேன்). ஒரு கிராமத்தில் 10 பெண்களுக்கு கடன் தேவை என்று வைத்துக் கொள்வோம். இவர்களுக்கு லட்சக்கணக்கில் கடன் தேவைப்படாது. ஒருவருக்கு மீன் வலை வாங்க 5000 ரூபாய் தேவைப்படும், ஒருவருக்கு பசு மாடு வாங்க 20,000 ரூபாய் தேவைப்படும். இந்த 10 பெண்களையும் இரு பிரிவாக பிரிக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் அந்த பிரிவிலிருந்து ஒரு லீடரை நியமிக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ இந்த தொழிலதிபர்கள் தான் வாங்கிய கடனுக்கு வட்டி + அசலில் சிறிய தொகையை உங்களுக்கு திரும்பி தந்து விடுவார்கள். தான் வாங்கிய கடன் தொகையை பொறுத்து மொத்த கடனையும் சில
மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திலோ அடைத்து விடுவார்கள். தவணை முறையில் கடனை திரும்ப அடைப்பதில் யாராவது பின்தங்கினால் அதை சமாளிப்பது பிரிவு லீடரின் வேலை. தன் தெருவில் இருக்கும் முனியம்மா லீடர் தன்னைப் பற்றி கேவலமாக பேசக்கூடாதே என்ற எண்ணமே ஏமாற்றும் எண்ணத்தை தவிர்த்து விடும். தன்னால் தான் சேர்ந்த பிரிவுக்கு அசிங்கம் வரக்கூடாது என்ற எண்ணமும் உங்கள் முதலீட்டை காப்பாற்றும்.

மைக்ரோ கிரடிட்டில் வெற்றி பெற நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் -- வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கும் திறமை யாருக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் திறமை. தன் சொந்த செலவுக்கு கடன் வாங்குபவர்களுக்கு கடன் கொடுத்தால் பெரும்பாலான பணம் திரும்ப வராது. தன் திறமையையும் உழைப்பையும் நம்பி இறங்குபவர்களுக்கு கடன் கொடுப்பது தான் உங்களுக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.

நீங்கள் கடன் கொடுப்பவர்களில் 90% மக்கள் மட்டும் கடனை திரும்ப கொடுத்தால் கூட உங்களுக்கு லாபம் வரும். மைக்ரோ கிரடிட் உங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்தால் இன்சூரன்ஸ் போன்ற பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு விற்கலாம். இந்தியாவில் ஏற்கனவே நிறைய பேர் மைக்ரோ கிரடிட் கொடுக்கிறார்கள். சில நிறுவனங்களின் லிங்குகள் கீழே...

http://www.sksindia.com/
http://www.sa-dhan.org/

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இந்த ஆள் ஏதோ அளக்கிறான் என்று நீங்கள் நினைத்தால் அதில் தப்பில்லை! கொஞ்சம் Skeptic ஆக இருப்பது நல்லது தான். பங்களாதேஷ் போன்ற நாடுகளிலேயே மைக்ரோ கிரடிட் பிரமாத வெற்றி பெற்று விட்டது. இந்தியாவில் நல்ல வெற்றி பெறும். பங்களாதேஷ் நாட்டின் கிராமீன் வங்கியின் உயர் அதிகாரி முகமது யூனுஸ் தான் மைக்ரோ கிரடிட்டின் ஹீரோ. Nightly Business Report என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி கடந்த 25 வருடங்களில் முக்கியமான 25 நபர்களில் ஒருவராக (25 most influential business people of the last 25 years) முகமது யூனுஸை தேர்ந்தெடுத்துள்ளது. அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை இங்கு படிக்கலாம். அந்த பேட்டி முழுவதையும் தமிழில் மொழி பெயர்க்க நேரமில்லை. அந்த பேட்டியில் எனக்கு பிடித்த சில வார்த்தைகளை மட்டும் மொழி பெயர்த்துள்ளேன்.

"ஏழைகள் போன்சாய் (ஜப்பானிய மரவகை) மரத்தை போன்றவர்கள். நன்றாக செழிப்புடன் உள்ள விதையை எடுத்து அதை சின்ன தொட்டியில் வைத்து வளர்க்கிறோம். அந்த விதை நல்ல நிலத்தில் வளர்ந்தால் அது பெரிய மரமாக வளரும். ஒரு சின்ன தொட்டியில் போன்சாயாக வளர்த்தால் அது சின்ன மரமாக தான் வரும். விதையின் மேல் தப்பில்லை. அந்த விதையை சின்ன தொட்டியில் விதைத்த இந்த சமூகத்தின் மேல் தான் தவறு"

தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

திரு. முகமது யூனுஸின் தொலைக்காட்சி இன்டர்வியூ

"இந்தியாவில் வியாபாரம் செய்ய சில யோசனைகள்" என்ற பதிவை சார்ந்த பதிவு இது. இந்த இன்டர்வியூ கொஞ்சம் நீளமாக இருப்பதால் தனிப்பதிவாக கொடுத்துள்ளேன்.

NBR: You have been credited with inventing the microcredit movement more than 30 years ago. Why did you go in that direction?

Yunus: I had no idea that I would ever get involved with something like lending money to poor people, given the circumstances in which I was working in Bangladesh. I was teaching in one of the universities while the country was suffering from a severe famine. People were dying of hunger, and I felt very helpless. As an economist, I had no tool in my tool box to fix that kind of situation.

NBR: So what gave you the idea to give people tools?

Yunus: While I traveled around the country, I told myself, 'As a person, forget about the tool box. As a human being, I can go out and be available to help another person.' So that's what I started doing. This was back in 1974. I saw how people suffered for a tiny amount of money. They had to borrow from the moneylender, and the moneylender took advantage of them, squeezed them in a way that all the benefits passed on to the moneylender and none remained for the borrowers. So I made a list of people who needed just a little bit of money. And when the list was complete, there were 42 names. The total amount of money they needed was $27. I was shocked. Here we were talking about economic development, about investing billions of dollars in various programs, and I could see it wasn't billions of dollars people needed right away. They needed a tiny amount of money. This was in 1976.

NBR: I understand some of the money was for a bamboo furniture maker?

Yunus: That's right. She was making bamboo stools and earning only two pennies a day. I couldn't believe that someone could make only two pennies for crafting such beautiful stools. After a discussion with her I found out she had to borrow money to buy the bamboo, which cost only 25 cents. But she didn't have the 25 cents. So she had to borrow it from the trader, who agreed to lend it to her on the condition that she sell the bamboo stool to him when it was finished at a price that he decided.

NBR: So how was your plan different?

Yunus: I wanted to give money to people like this woman so that they would be free from the moneylenders to sell their product at the price which the markets gave them -- which was much higher than what the trader was giving them.

NBR: But even then you charged interest.

Yunus: Oh yes ... Definitely, yes.

NBR: And why is that? What was the thinking?

Yunus: I thought if you do things in a businesslike way, then the project can become as big as you want it to because you are earning enough money to cover all your costs. You are not dependent on anybody. You are not dependent on a limited supply of capital. This is business money. Business money is limitless. And then, you can reach out to many more people than you would otherwise do.

NBR: So this is not charity?

Yunus: This is not charity. This is business: business with a social objective, which is to help people get out of poverty. Other banks were not giving loans to these people.

NBR: So how did you get from that first $27 to working with Grameen Bank and expanding this around the globe?

Yunus: The villagers got very excited that I gave them the money. To them, it was like a miracle. Seeing this, a question came to my mind. If you can make so many people so happy with such a small amount of money, why shouldn't you do more of it? Why shouldn't you reach out to many more people? I could do this by linking these people with a bank that could lend them the money. So I went to the bank and proposed that they lend money to the poor people. The bankers almost fell over. They couldn't believe what had been proposed to them. They explained to me that the bank cannot lend money to poor people because these people are not creditworthy. So a long series of debates began with me and the banking system. Finally, I resolved it after about six months by offering myself as a guarantor. I said, 'I will sign the loan papers. I will take the risk, and you give the money.' I got the money and gave it to the people. And luckily for me, all the people paid it back. The banks had been saying that I would never get the money back and would ultimately have to pay it back myself. I said, 'I don't know anything. Let me try it out.' And I tried it, and it worked.

NBR: Has it continued to work?

Yunus: Yes, and we expanded it from village to village. But we still saw that the banks weren't changing their minds even after I had demonstrated that there was no risk to the process, that banks could do better by giving money to poor people, who were paying it back, than to rich people, who were not paying it back.

NBR: Poor people were paying the money back [more reliably] than rich people?

Yunus: Much better than rich people. Because Bangladesh has a tradition of rich people who borrow money from the big banks and hardly pay it back.

NBR: That's pretty startling.

Yunus: Very startling, yes.

NBR: You have said that you loaned primarily to women. Why is that?

Yunus: It has to do with the decision to have a separate bank for the poor people. From the beginning, I had complained about the banking system on two grounds. One complaint was that the banking system was denying financial services to the poor people through certain rules it had set up. The second allegation was that the banking system also was not treating women fairly. If you look at the gender composition of all the borrowers of all the banks in Bangladesh, not even 1% of the borrowers happen to be women. I said this is a very gender-biased organization. So when I began, I wanted to make sure half the borrowers in my program are women so that they are even. I did that. It was not easy because women themselves didn't think that they should borrow money. I had to do a lot of convincing. I encouraged them to believe that they can borrow money and make money. Part of that effort was to overcome fears -- cultural fears -- and the fact that they had never had any experience with business and so on. Soon we saw that money going to women brought much more benefit to the family than money going to the men. So we changed our policy and gave a high priority to women. As a result, now 96% of our four million borrowers in Grameen Bank are women.

NBR: So you say you have four million borrowers. How much money over time have you loaned out?

Yunus: If we start with that $27, and you add on all the money that we have loaned, it's nearly $5 billion that we have given over time. Now we have come to a stage where every two years we are giving $1 billion. So half a billion dollars a year. That's the stage we are in.

NBR: And this keeps funding itself because of the interest that's being paid?

Yunus: That's right. We take the deposits and we offer the depositors good interest rates. The
money we lend to the borrowers makes a profit for the bank.

NBR: While people say that your program works well, some also say that it tends to focus on the top tier of poor people. How do you respond to that -- the criticism that it doesn't get to the people who really need such basic things as food and shelter?

Yunus: Grameen Bank helps poor people of all classes, of all types. Bottom, middle, and higher levels. Our work started with $27 to 42 people. Although we say we can work with all levels, and Grameen Bank is an example, still people don't pay attention to what we do. They just say, 'Oh no. Microcredit. It's not doing the right thing, focusing only on the upper level of poor people.' So last year we started to focus on the beggars. Our argument is you can't be poorer than beggars. That's the last stage of your survival. You go around and beg for food, collect rice, cook it at home and then eat. That's your daily survival ration. So we are interested in them. We are saying, 'Look, as you go house to house, would you carry some merchandise with you -- some cookies, candies, toys for the kids and so on -- to sell?' People love that. We thought initially we would have 4,000 to 5,000 borrowers in that program, but as the year ended we had more than 26,000 beggars. They are very happy because they have seen that when they go to houses which have never opened their front door to them, that door is now open. The beggars show their merchandise and they are given a stool to sit on, which they never had before. The beggars not only sell but also get respect from the families.

NBR: We have recently seen elections in Iraq for the first time. Self determination is the hope there. In a sense, is that what your program does? It changes people?

Yunus: Definitely. Actually, if you look at it one way, the microcredit we give to the women is a tool to explore one's self, how much capacity that is stored up inside: 'I never knew that I had the capacity. That creativity. That ingenuity. To make money to express myself. So that money gives, for the first time, an occasion for me to find out how much I can do.' When you were successful in the first round, when you took tiny amounts -- $30, $35 -- and went into business and paid back the loan, you are now much more equipped to do better. Bigger. So you ask for a $50 loan, a $60 loan, because you think you can do bigger business and more challenging business than when you first took out an easy loan.

NBR: It gives you that self confidence.

Yunus: That self confidence. And if you go through 10 rounds and 15 rounds you are ready for a much bigger challenge than you thought. We introduced information technology into the system. We created a cell phone company called Grameen Phone and brought the phone into the villages of Bangladesh. We gave loans to the borrowers to buy a cell phone and start selling phone service. It became a growing business. Now that they are already confident business women, they can very easily come into a business which they never heard of before. They never saw a telephone in their life but they accepted it as a business idea, and there are now more than 100,000 telephone ladies all over Bangladesh doing good business and connecting Bangladesh with the rest of the world.

NBR: Do they use the telephone in their business, or is this a business itself?

Yunus: It's a business itself. If I have a phone, since nobody else has a phone, they have to come to me to use it. They make a call and pay. It's like a public telephone call office. The owner of the phone becomes a one-person public phone office.

NBR: So it's the newest technology for people who have never had a telephone or anything like that.

Yunus: That's right. People complain that microcredit will let these women raise only chickens and cows and nothing else, that they are always stuck with primitive technology and don't have the capacity to move up to a new technology. So this is again a demonstration. Give them a chance to pick up state-of-the-art technology.

NBR: And your program has gone beyond Bangladesh? Are you everywhere in the world?

Yunus: To our knowledge, our program is running in more than 100 countries, some in a big way, some in a small way. And more and more countries are joining in each year, each day.

NBR: Africa is one area of interest. Have there been any special, noteworthy cultural issues there one way or the other?

Yunus: There are cultural issues everywhere -- in Bangladesh, Latin America, Africa, wherever you go. But somehow when we talk about cultural differences, we magnify those differences. To me, after all this experience, I see there are 95% common things in culture, only 5% differences. The human culture is the basic culture. Finding ways to improve people's lives may take different shapes, but it's still the same urge to improve your family, to care for your children, to have a decent life for yourself and so on. So those cultures are common cultures, as is the culture of poverty, deprivation and lack of opportunity. So we create a new culture of confidence and self dignity by [building] businesses that are not at the mercy of anybody. They are equal partners: the bank and the people. They are in business in equal partnership.

NBR: They are both taking a risk.

Yunus: They are both taking a risk and doing business together.

NBR: The focus of this series of interviews is greatest challenges. What would you say your greatest challenge has been?

Yunus: My greatest challenge has been to change the mindset of people. Mindsets play strange tricks on us. We see things the way our minds have instructed our eyes to see. We think the way our minds have instructed our minds to think. We are familiar with one way of thinking. Most of it comes during our academic years, during our student years. The teachers we had, the books we read -- they made up our mindset, and ever since we are stuck with that. We cannot break through this. If you are a successful student in a university, actually you become the 'mini' of the professor whom you liked and admired most ... So that's what mindset does. When you bring in a new thought, you are in conflict with those old thoughts. You struggle, but the old thoughts still prevail because the mindset is so strong. It would be good if we could have an educational system, a learning process, where we could retain our originality and at the same time accumulate insight and never become a mini professor, but remain ourselves and still absorb different views. Yet institutions have their own mindsets, and it's very difficult to penetrate and change them. So changing has to be done faster. It's a faster world -- particularly in the 21st century -- but human minds, our academic system, make change slow. So this has been the hardest challenge that I have faced along the way.

NBR: So you want change to be at a faster speed?

Yunus: Absolutely. Yes.

NBR: You were among the 25 most influential individuals that the Wharton School and Nightly Business Report selected for this series. In a sense, you are unique on that list. How do you see yourself among that group?

Yunus: I was very surprised. I didn't think I was at that level. These are the people who are admired all over the world, who have accomplished so much. Seeing that I was one of the 25, I was really inspired and overwhelmed. But in a way, if I look back, this is recognition of the importance of financial services to the poorest people. This is what you recognized. Today, if you look at financial systems around the globe, more than half the population of the world -- out of six billion people, more than three billion -- do not qualify to take out a loan from a bank. This is a shame. What kind of institutions have we built that cannot afford to extend their services to the majority of the people?

NBR: And finally, what is your vision for the future?

Yunus: My vision for the future? Two things: to make credit a human right so that each individual human being will have the opportunity to take loans and implement his or her ideas so that self-exploration becomes possible. And second: that it will lead to a world where nobody has to suffer from poverty -- a world completely free from poverty. Not a single human being will suffer from the misery and indignity of poverty. Poverty is unnecessary. The human being is quite capable of taking care of himself or herself. But we have created a society that does not allow opportunities for those people to take care of themselves because we have denied them those opportunities. I have described poor people as like a bonsai -- that little tree that grows in a flower pot. I said you pick the best seed of the tallest tree in the forest, and plant it in a flower pot, and it will grow into a tiny tree. Is there anything wrong with the seed? Nothing is wrong with the seed. It's the best seed. Then why is it tiny? Because you planted it in a flower pot. You didn't allow it to grow in the real soil. The poor people are the bonsai people. Society has not allowed them the real soil. If you allow them the real soil, real opportunities, they will grow as tall as everybody else.

NBR: What has happened to those furniture makers that you first loaned $27 to?

Yunus: They have changed. All of Bangladesh has changed if you look from the bottom up. In general, you see Bangladesh is still a poor country and so on. But empowerment has come to the women of Bangladesh -- even the poorest women in Bangladesh. It's tremendous. It's a dramatic change that has taken place. Women have access to money. They can now plan. They can now dream. Their children are in school. Many of them are going into higher education through Grameen Bank financing. New communities are emerging. A new generation is emerging. New technology has been brought in -- information technology, mobile phones, and so on -- in a country where 70% of the people have no access to electricity. We brought solar energy -- self-contained electricity -- and connected it to the mobile phones. We try to address all that. Housing has been brought in, and new infrastructure. The economy as a whole has changed. People are creating their own jobs. They are not waiting for anybody else to hire them.
NBR: And this program has been working in the United States?

Yunus: Yes in the United States, Canada, in England, in France, in Norway. Rich countries, poor countries -- the problem remains the same.

Friday, December 30, 2005

நம்பர்கள் மாறினால் தலையெழுத்து மாறுமா?

ஜப்பானில் உள்ள பெரிய தரகர் நிறுவனம் மிஷுவோ செக்யூரிட்டீஸ். டிசம்பர் 9ம் தேதி அன்று புதிதாக J-Com என்ற நிறுவனம் பங்குகளை ஜப்பான் சந்தையில் வெளியிட்டது. மிஷுவோ தரகர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தரகர் J-Com நிறுவனத்தின் ஒரு பங்கை 610,000 யென்னுக்கு (Rs. 2,27,000) விற்க தன் கம்ப்யூட்டரில் ஆர்டர் செய்திருக்கிறார். இந்த ஒரு ஆர்டரினால் ஜப்பான் பங்கு சந்தையே அந்த ஒரு நாளில் ஆட்டம் கண்டு விட்டது.

ஒரு பங்கை 610,000 யென்னுக்கு விற்க வேண்டும் என்று ஆர்டர் போடுவதற்கு பதிலாக 610,000 பங்குகளை ஒரு யென்னுக்கு விற்க வேண்டும் என்று இந்த தரகர் ஆர்டர் போட்டு விட்டார்! அது தான் பெரிய பிரச்னை ஆகி விட்டது.

இந்த பிரச்னையால் மிஷுவோ நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் 1012 கோடி. ஜப்பான் பங்கு சந்தையின் பெயர் கெட்டு விட்டது. ஜப்பான் நிதி அமைச்சகம் ஏகப்பட்ட டென்ஷனாகி விட்டது. இந்த கலாட்டா நடந்த சில நாட்களில் ஜப்பான் பங்கு சந்தையின் உயர் அதிகாரி ராஜினாமா செய்து விட்டார்.

இப்போது சொல்லுங்கள்... நம்பர் மாறினால் தலையெழுத்து மாறுமா, மாறாதா?!

Sunday, December 25, 2005

தங்கமே தங்கம்!

தங்கம் விலை கூரையை பிய்த்துக் கொண்டு போய்கிறது! இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

இன்னும் ஒரு வருடத்தில் விற்று லாபம் பார்ப்பதற்காக வாங்கினால் அது கொஞ்சம் ரிஸ்க்கான சமாசாரம் தான். 2006 இறுதிக்குள் இன்னும் 5% விலை ஏறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதலில் தங்கம் விலை ஏன் அதிகமாகிறது என்பதை பார்ப்போம்.

1. நம் நாட்டிலும் சீனாவிலும் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டு போகிறது. இரண்டு நாடுகளிலும் தங்கம் ஒரு கௌரவ அடையாளம். தங்கள் வாழ்க்கை தரம் மாறியதை மற்றவர்களுக்கு காண்பிக்க தங்கம் பயன்படுகிறது.

2. அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் என்று நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள். டாலர் விலை குறைந்தால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் தங்கத்தின் demand அதிகமாகும், அதன் விளைவாக தங்கத்தின் விலை கூடும்.

3. மேலே சொன்ன காரணங்களுக்காக Hedge Fund நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கத்தின் மேல் மோகம் கொண்டு அலைகிறார்கள்.

தங்கத்தில் லாபம் பார்ப்பதற்காக அதை நீங்கள் வாங்குவதாக இருந்தால் உங்களின் மொத்த முதலீட்டில் 5% - 10% பணத்தை மட்டும் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். தங்கம், சில்வர், காப்பர் மற்றும் பல உலோகங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது இன்னும் பாதுகாப்பானது. தங்கத்தின் விலை சரிந்தாலும் மற்ற உலோகங்கள் Hedge போல இருந்து மொத்த முதலீட்டையும் காப்பாற்றும்.

அமெரிக்க சந்தையில் உங்களால் முதலீடு செய்ய முடிந்தால் கீழ்க்கண்ட பரஸ்பர நிதிகள் உதவும்.

Vanguard Precious Metals and Mining (VGPMX)
USAA Precious Metals and Minerals (USAGX)

Sunday, December 18, 2005

ஆப்ஷன் - பாகம் 7 (கடைசி பாகம்)

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6


இந்திய பங்கு சந்தையில் ஆப்ஷன் விலைகள் பற்றி பயனுள்ள விபரங்களை தந்த R. ஜான் கிறிஸ்டிக்கு நன்றி! பாகம் 6-ன் பின்னூட்டத்தில் இந்திய சந்தையைப் பற்றிய விபரங்களை ஜான் எழுதியிருந்தார். இந்த பாகத்தில் இந்திய சந்தையில் விற்கும் ஆப்ஷன்களை உதாரணமாக காட்டியுள்ளேன்.

அமெரிக்க சந்தையில் ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் 100 பங்குகளை கட்டுப்படுத்தும். ஆனால் இந்திய சந்தையில் ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் கட்டுப்படுத்தும் பங்குகளின் எண்ணிக்கை பங்குகளின் விலையை பொறுத்து மாறுகிறது. சுலபமாக விளக்குவதற்காக இந்திய சந்தையிலும் ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் 100 பங்குகளை மட்டும் கட்டுப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். உதாரணமாக ACC ஆப்ஷன் ஒப்பந்தம் ஒன்று 750 பங்குகளை கட்டுப்படுத்துகிறது, ஆனால் இது 100 பங்குகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக வைத்துக் கொள்ளலாம். Just for consistency. அமெரிக்க சந்தையில் ஆப்ஷன்கள் மூன்றாவது வெள்ளியன்று காலாவதியாகும். இந்திய சந்தையில் கடைசி வியாழன்று பங்கின் ஆப்ஷன்கள் காலாவதியாகின்றது.
ஆப்ஷன் ஒரு அருமையான விஷயம். விபரம் தெரியாமல் காலை விட்டால் சில சமயம் இது விஷமாகவும் மாறி விடும். ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை மேலே போகும் என்ற தீவிர நம்பிக்கையில் தான் நிறைய பேர் Call ஆப்ஷன்களை வாங்குகிறார்கள். அதே போல பங்குகளின் விலை சரிய போகிறது, அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் Put ஆப்ஷன்களை வாங்குகிறார்கள். தான் வைத்திருக்கும் பங்குகளை பாதுகாப்பதற்காக Put ஆப்ஷன்களை வாங்குபவர்களை விட விலை சரிவின் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் Put ஆப்ஷன்களை வாங்குபவர்கள் தான் அதிகம்.

இப்படி Call ஆப்ஷன்களையும் Put ஆப்ஷன்களையும் வாங்குபவர்களின் கணிப்பு தவறி விட்டால் நிறைய நஷ்டம் ஏற்படும். ஆப்ஷன்களை முறைப்படி பயன்படுத்தினால் நஷ்டங்களை குறைத்து லாபத்தை அதிகப்படுத்தலாம். சிறு முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு கையிலிருக்கும் முதலையும் இழந்து விடுவார்கள்.

அனுபவமுள்ள டிரேடர்கள் Spread என்ற சிறந்த உத்தியை பயன்படுத்தி தன் கணிப்பு தவறினாலும் பணத்தை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

பொதுவாக பங்குகள் விலை உயரும் என்று நம்புவர்களை Bull என்றும் விலை சரியும் என்று நம்புவர்களை Bear என்றும் சொல்வார்கள். பங்குகள் விலை உயரும் அல்லது பங்குகள் விலை நிச்சயமாக கீழே விழப்போவதில்லை என்று நம்புவர்கள் Bull Put Spread என்ற உத்தியை கையாண்டால் லாபம் சம்பாதிக்கலாம்.

Bull Put Spread:

Bull Put Spread-ல் ஒரு குறிப்பிட்ட விலைக்கு Put ஆப்ஷன்களை விற்றுவிட்டு அதை விட குறைந்த விலைக்கு Put ஆப்ஷன்களை வாங்க வேண்டும். இதன் மூலம் கணிசமான லாபம் பார்க்கலாம்.

ஒரு உதாரணம்.

ACC நிறுவனத்தின் பங்குகளின் விலை Rs. 536
டிசம்பர் 29, 2005க்கான Rs. 540 Put ஆப்ஷனின் விலை Rs. 12.25
டிசம்பர் 29, 2005க்கான Rs. 530 Put ஆப்ஷனின் விலை Rs. 6.30

Rs. 540 Put ஆப்ஷன்கள் 10 ஒப்பந்தங்களை நான் விற்பதாக வைத்துக் கொள்வோம். எனக்கு கிடைக்கும் வருமானம் = 10 * Rs.12.25 = Rs. 12250.
(ஒரு பங்குக்கான ஆப்ஷன் விலை Rs. 12.25, ஒரு ஒப்பந்தத்தில் 100 பங்குகள், அதனால் ஒரு ஒப்பந்தத்துக்கு Rs. 1225 வருமானம்)

இந்த Put ஒப்பந்தங்களை விற்ற கையோடு டிசம்பர் 29, 2005 Rs. 530க்கான Put ஒப்பந்தங்கள் பத்தை நான் வாங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு நான் கொடுக்க வேண்டிய விலை = 10 * Rs.6.30 = Rs. 6300.

Rs. 540 Put விற்றதில் கிடைத்த வருமானம் Rs. 12250
Rs. 530 Put வாங்கியதற்காக கொடுத்த விலை Rs. 6300
என்னுடைய லாபம் = 12250 - 6300 = Rs. 5950

ACC பங்குகள் இறக்கை கட்டி பறக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டிசம்பர் 29, 2005 அன்று ACC நிறுவனத்தின் பங்குகள் Rs. 540க்கு குறையாமல் இருந்தாலே எனக்கு Rs. 5950 லாபம்.

ஒரு வேளை ACC பங்குகள் விலை Rs. 530க்கு கீழே சரிந்து விட்டால் என்னுடைய அதிக பட்ச நஷ்டம் Rs. 4050 மட்டும் தான். கொஞ்சம் விபரமாக பார்ப்போம்.

Rs. 540 Put விற்றேன், அதே சமயத்தில் Rs. 530 Put வாங்கி விட்டேன். பத்து ஒப்பந்தங்கள் விற்று / வாங்கியிருக்கிறேன். Rs. 540 Put ஆப்ஷன்களை என்னிடமிருந்து வாங்கியவர் அதை exercise செய்தால் நான் அவரிடமிருந்து ACC பங்குகள் ஆயிரத்தை Rs. 540 விலைக்கு வாங்க வேண்டும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நான் உடனே என்னிடம் உள்ள Rs. 530 Put ஆப்ஷனை exercise செய்து விடுவேன். எனக்கு Rs. 530 Put ஆப்ஷனை விற்றவர் என்னிடம் உள்ள ஆயிரம் ACC பங்குகளை ஒரு பங்கு Rs. 530க்கு வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்.

Rs. 5,40,000க்கு பங்குகளை வாங்கி Rs. 5,30,000க்கு விற்க வேண்டியிருக்கும், அதனால் Rs.10,000 நஷ்டம். Bull Put Spread செய்ததில் எனக்கு கிடைத்த லாபம் Rs. 5950. அதனால் என்னுடைய மொத்த நஷ்டம் 10000 - 5950 = Rs. 4050.

ACC பங்குகள் சரிந்து Rs. 10க்கு விற்றால் கூட என்னுடைய அதிக பட்ச நஷ்டம் Rs. 4050 மட்டும் தான். இந்த ட்ரேடை Spread செய்யாமல் Rs. 540 Put ஆப்ஷனை மட்டும் விற்றிருந்தாலோ அல்லது ஆயிரம் பங்குகளை Rs. 5,40,000க்கு வாங்கியிருந்தாலோ என்னுடைய நஷ்டம் எக்கச்சக்கமாயிருக்கும். ACC பங்குகள் Rs.10க்கு சரிந்தால் தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த ட்ரேடில் என்னுடைய அதிக பட்ச லாபம் Rs. 5950, அதிக பட்ச நஷ்டம் Rs. 4050.

லாபம், நஷ்டம் இரண்டும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. Spread-ல் மிக அதிக லாபம் பார்க்க முடியாது. அதே சமயத்தில் மிக அதிக நஷ்டமும் ஆகாது. கொஞ்சம் கொஞ்சமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

Spread செய்வதில் நிறைய பலன்கள் உள்ளன.

1. பங்குகளை வாங்குவதற்கு போட வேண்டிய முதலை விட Spread செய்வதற்குள்ள முதல் மிக குறைவு. மேலே கண்ட உதாரணத்தில் Strike price-க்களுக்கு உள்ள வித்தியாசம் Rs. 10000 மட்டும் தான் மார்ஜினில் கொடுக்க வேண்டியிருக்கும்.

2. Put/Call ஆப்ஷன்களை விற்க அனுமதிக்காத தரகர்கள் கூட Spread செய்ய அனுமதிப்பார்கள்.

3. டிசம்பர் 29 அன்று ACC பங்குகள் 540க்கு மேலே விற்றால் நான் செய்த Bull Put Spread தானாகவே முடிந்து விடும். நான் விற்ற ஆப்ஷன்களை திரும்ப வாங்க வேண்டிய அவசியமில்லை. அதனால் தரகர் கமிஷனும் மிச்சம்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக நஷ்டங்களுக்கு நாமே எல்லை வகுத்து விடலாம்.

சில பிரச்னைகளும் உள்ளது. பிரச்னைகள் இல்லாமல் ஒரு முதலீடா?!

1. ACC பங்கின் விலை Rs. 540க்கும் Rs. 530க்கும் இடையில் இருந்தால் விலையை பொறுத்து நஷ்டம் ஏற்படும். எப்படியிருந்தாலும் நஷ்டம் Rs. 4050க்கு மேலே இருக்காது.

2. என்னிடமிருந்து Rs. 540 Put வாங்கியவர் அதை டிசம்பர் 29க்கு முன்பே exercise செய்து விட்டால் கஷ்டமாகி விடும். இந்த Spread-ஐ திரும்ப வாங்கும் நிலைமை ஆகி விடும். Rs. 540 Put ஆப்ஷனை வாங்கி Rs. 530 Put ஆப்ஷனை விற்று இந்த Spread ட்ரேடை முடிக்க வேண்டியிருக்கும்.


படங்கள் உதவி: Optionsxpress.com, Cartoonbank.com


நவம்பர் 15 அன்று நான் ஆப்பிள் நிறுவன பங்குகளில் December $55/$50 Bull Put Spread செய்திருந்தேன். டிசம்பர் 16 அன்று ஆப்பிள் பங்குகள் $71க்கு விற்றது. அதனால் என்னுடைய Spread-ல் கிடைத்த லாபம் $300. நான் Bull Put Spread செய்யும் போது ஆப்பிள் பங்குகளின் விலை $60+. இந்த பங்குகள் அந்த விலையிலிருந்து $71 விலைக்கு உயராமல் $60 விலையிலே இருந்திருந்தால் கூட எனக்கு லாபம் தான். Bull Put Spread-ல் உள்ள பெரிய சௌகரியம் அது. பங்குகளின் விலை ஆடாமல் அசையாமல் இருந்தாலும் லாபம் சம்பாதிக்கலாம்!

ACC பங்குகள் கீழே விழும் என்று நம்புவர்கள் Bear Put Spread என்ற உத்தியை கையாளலாம். Bull Put Spread-ல் செய்ததை அப்படியே உல்டா செய்தால் அது Bear Put Spread ஆகி விடும்.

Bear Put Spread:

ACC நிறுவனத்தின் பங்குகளின் விலை Rs. 536
டிசம்பர் 29, 2005க்கான Rs. 540 Put ஆப்ஷனின் விலை Rs. 12.25
டிசம்பர் 29, 2005க்கான Rs. 530 Put ஆப்ஷனின் விலை Rs. 6.30

டிசம்பர் Rs. 540 Put ஆப்ஷன்கள் 10 ஒப்பந்தங்களை நான் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். என் செலவு = 10 * Rs.12.25 = Rs. 12250.

இந்த Put ஒப்பந்தங்களை வாங்கிய கையோடு டிசம்பர் 29, 2005 Rs. 530க்கான Put ஒப்பந்தங்கள் பத்தை நான் விற்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் என்க்கு கிடைக்கும் பணம் = 10 * Rs.6.30 = Rs. 6300.

Rs. 530 Put விற்றதில் கிடைத்த வருமானம் Rs. 6300
Rs. 540 Put வாங்கியதற்காக கொடுத்த விலை Rs. 12250
மொத்தத்தில் என் செலவு = 12250 - 6300 = Rs. 5950

ACC பங்குகள் டிசம்பர் 29, 2005-ல் Rs. 530க்கு கீழே விற்றால், எனக்கு லாபம் கிடைக்கும். எவ்வளவு லாபம் கிடைக்கும்? Rs. 530க்கு கீழே பங்குகள் விழுந்து விட்டால், என்னிடமிருந்து Rs. 530 Put வாங்கியவர் எனக்கு ACC பங்குகளை Rs. 5,30,000க்கு விற்று விடுவார். அந்த பங்குகளை என்னிடம் Rs. 540 Put விற்றவரிடம் Rs. 5,40,000க்கு என்னால் விற்று விட முடியும்.
அதனால் கிடைக்கும் லாபம் 5,40,000 - 5,30,000 = Rs. 10,000.

இந்த Spread-ல் என் செலவு Rs. 5950
எனக்கு கிடைக்கும் மொத்த லாபம் = 10,000 - 5950 = Rs. 4050ஒரு வேளை இந்த பங்குகள் 540க்கு மேலே விற்றால் என்னுடைய அதிக பட்ச நஷ்டம் Rs. 5950 மட்டுமே. இந்த Spread-ஐ ஆரம்பிக்கும் போது போட்ட பணம் மட்டும் தான் நஷ்டமாகும்.

Put ஆப்ஷன்களை வைத்து Spread செய்வது போல் Call ஆப்ஷன்களை வைத்தும் Spread செய்யலாம். Bull Call Spread, Bear Call Spread என்று அதிலும் இரண்டு வகைகள் உள்ளன. அதிக விளக்கத்துடன் இல்லாமல் சுருக்கமாக அவற்றைப் பற்றி பார்ப்போம். மேலே கண்ட Bull Put Spread, Bear Put Spread புரியவில்லை என்றால் திரும்பவும் படித்து பாருங்கள். அவை நன்றாக பிடிபட்ட பிறகு Call Spread பற்றி படியுங்கள்.

Call Spreadக்கு Andhra Bank பங்குகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இந்த பங்குகள் Rs. 94க்கு விற்கின்றன. இந்த பங்குகளுக்கான ஆப்ஷன் ஒப்பந்தங்களும் 100 பங்குகளை மட்டும் கட்டுப்படுத்துவது கிடையாது. எளிதாக புரிவதற்காக ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் 100 பங்குகளை மட்டும் கட்டுப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம்.

ஆந்திரா வங்கியின் டிசம்பர் 29, 2005க்கான Rs. 95 Call ஆப்ஷனின் விலை Rs. 2.70; Rs. 100 Call ஆப்ஷனின் விலை Rs. 1.40

Bull Call Spread:

டிசம்பர் 29, 2005க்கான Rs. 95 Call ஆப்ஷன் ஒப்பந்தங்கள் பத்தை வாங்க வேண்டும். செலவு = 10 * 2.70 = Rs. 2,700

டிசம்பர் 29, 2005க்கான Rs. 100 Call ஆப்ஷன் ஒப்பந்தங்கள் பத்தை விற்க வேண்டும்.

வரவு = 10 * 1.40 = Rs. 1,400

இந்த Spreadக்கான மொத்த செலவு = 2,700 - 1,400 = Rs. 1,300

ஆந்திரா வங்கியின் பங்குகள் டிசம்பர் 29, 2005 அன்று Rs. 100க்கு மேல் விற்றால்:
உங்களின் மொத்த லாபம் = Strike Priceகளுக்கு உள்ள வித்தியாசம் - நீங்கள் செய்த செலவு = 5,000 - 1,300 = Rs. 3,700.

இந்த பங்குகள் Rs. 95க்கு கீழே போய்விட்டால் உங்களின் அதிக பட்ச நஷ்டம் நீங்கள் செய்த செலவு Rs. 1300 மட்டுமே.Bear Call Spread:

Bull Call Spread-ஐ உல்டா செய்தால் Bear Call Spread.

டிசம்பர் 29, 2005க்கான Rs. 100 Call ஆப்ஷன் ஒப்பந்தங்கள் பத்தை வாங்க வேண்டும்.

செலவு = 10 * 1.40 = Rs. 1,400

டிசம்பர் 29, 2005க்கான Rs. 95 Call ஆப்ஷன் ஒப்பந்தங்கள் பத்தை விற்க வேண்டும்.

வரவு = 10 * 2.70 = Rs. 2,700

இந்த Spread செய்ததால் கிடைத்த மொத்த வரவு = 2,700 - 1,400 = Rs. 1,300

ஆந்திரா வங்கியின் பங்குகள் டிசம்பர் 29, 2005 அன்று Rs. 95க்கு கீழே விற்றால், உங்களுக்கு கிடைத்த மொத்த வரவு Rs. 1300 உங்களுக்கு லாபம்.

இந்த பங்குகள் Rs. 100க்கு மேலே போய்விட்டால்:
உங்களின் அதிக பட்ச நஷ்டம் = Strike Priceகளுக்கு உள்ள வித்தியாசம் - உங்களுக்கு ஏற்கனவே கிடைத்த வரவு = 5,000 - 1,300 = Rs. 3,700.

ஆந்திரா வங்கியின் பங்குகள் Rs. 500க்கு போனால் கூட உங்களின் அதிக பட்ச நஷ்டம் Rs. 3700.ஆப்ஷன்களை முறைப்படி பயன்படுத்தினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் முதலீடு செய்த பணத்தை பாதுகாக்கலாம்.

இந்த தொடரில் ஊக்குவிக்கும் பின்னூட்டங்கள் எழுதிய அனைவருக்கும் மிக்க நன்றி! இந்த தொடரை படித்த அனைவரும் ஆப்ஷனில் நிறைய பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்!!

Good Luck!

Sunday, December 11, 2005

ஆப்ஷன் - பாகம் 6

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 7

ஆப்ஷன் பாகம் ஐந்தை படித்த பிறகு என் நண்பர் கிண்டல் செய்தார் “அதென்ன வாகினி, ராகினி என்று பழைய பேரா எழுதுறீங்க? ஒரு சினேகா, ஒரு அசின்னு எழுதினால் நல்லாயிருக்குமே?!” வாகினி என்ற பெயரை உபயோகித்ததற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. பயப்படாதீர்கள், இது ஒன்றும் காதல் கதையல்ல!

நான் பகுதி நேர வகுப்பில் “Business Law” என்ற சட்ட சம்பந்தமான பாடம் படித்து வருகிறேன். இந்த பாடத்துக்கான புத்தகத்தில் பொருள் விற்பவரை “Sam the Seller” என்று கூறுகிறார்கள். பொருள் வாங்குபவருக்கு “Bob the Buyer” என்று பெயர். பிராடு செய்யும் ஆளுக்கு “Frank the Fraud” என்று பெயர். “Seller” மற்றும் “Sam” இரண்டுமே “S”-ல் ஆரம்பிப்பதால் “Sam” என்ற பெயரை படிக்கும் போதே அவர் “Seller” என்று புரிந்து விடும். இதே உத்தியை கையாண்டதன் விளைவு தான் “வாங்குபவர்” பெயர் வாகினி ஆகிவிட்டது. “விற்பவர்” விவேக்காகி விட்டார். இனிமேல் எழுதும் ஏதாவதொரு பதிவில் என் ஜொள்ளு நண்பருக்காக சிரிக்கும் சினேகா, அழகிய அஸின், நமட்டு சிரிப்பு நமீதா என்று எழுத போகிறேன்.

நீங்கள் முதல் முறையாக இந்த தொடரில் எட்டிப் பார்த்தால், பாகம் ஒன்றிலிருந்து தொடங்கவும்.

இந்த பாகத்திலும் அடுத்த பாகத்திலும் ஆங்கில வார்த்தைகள் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும். I have no other option :-) எந்தவொரு பங்கை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய ஆப்ஷன்களின் சாய்ஸ் நிறைய உள்ளது. உதாரணமாக IBM பங்குகளை எடுத்துக் கொண்டால் ஏப்ரல் 2006-க்கான் ஆப்ஷன்களின் எண்ணிக்கை மட்டும் 17. இன்று IBM $88க்கு விற்கிறது. $40-லிருந்து $120 வரைக்கும் வெவ்வேறு “Strike Price” உள்ளது. விபரங்களுக்கு இங்கு பார்க்கவும். http://finance.yahoo.com/q/os?s=IBM&m=2006-04 இதில் எந்த ஆப்ஷனை வாங்குவது அல்லது விற்பது? இந்த கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னால் சில டெக்னிக்கல் வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1. விலை மாறும் தன்மை (Volatility):

சுருக்கமாக சொல்லப் போனால் ஒரு பங்கின் விலை எந்த அளவுக்கு மேலேயும் கீழேயும் போய் வருகிறது என்பதை குறிப்பது தான் “Volatility”. கூகுள் பங்குகள் ஒரே நாளில் $10 மேலே போகிறது அல்லது $10 கீழே விழுகிறது. அதனால் இந்த பங்குகளின் “Volatility ” அதிகம்.

Volatility-ல் இரண்டு வகை உண்டு. Historical Volatility (HV) மற்றும் Implied Volatility (IV). HV என்பது பங்குகளுக்காக. IV என்பது ஆப்ஷன்களுக்காக. கூகுளின் HV 31, IV 29. IBM பங்குகளுக்கு HV 13, IV 20. Volatility அதிகமாக அதிகமாக பங்குகளின் விலை நிலையாக இருக்காது, ஊசலாடும். Volatility அதிகமாக இருக்கும் நேரத்தில் ஆப்ஷன் பிரிமியம் அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் ஒரு நிமிடம் நிறுத்தி சிந்தித்துப் பாருங்கள்.

ஆப்ஷன் பிரிமியம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த ஆப்ஷனை வாங்குவது நல்லதா அல்லது விற்பது நல்லதா?

விற்பது தான் நல்லது. Covered Call விற்கலாம் அல்லது Put ஆப்ஷனை விற்கலாம். ஒரு பங்கின் Volatility எப்போதும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை. சில வருடங்களுக்கு முன்னால் மைக்ரோசாப்டின் Volatility அதிகமாக இருந்தது. இப்போது சாதாரண லெவலுக்கு போய்விட்டது. இன்னும் சில வருடங்களில் கூகுளின் Volatility -ம் சாதாரண லெவலுக்கு வந்து விடும்.

2. ஆப்ஷனின் உண்மையான விலையும் நேரத்தின் விலையும்:

நீங்கள் ஏப்ரல் 2006க்கான $80 Call ஆப்ஷனை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஆப்ஷனின் விலை (பிரிமியம்) $10.90.

IBM பங்கின் இன்றைய விலை $88.72.

$88.72 விலைக்கு விற்கும் பங்குகளை $80 விலைக்கு வாங்க $80+$10.90 = $90.90 விலை ஒரு பங்குக்கு கொடுக்க சம்மதிக்கிறீர்கள்.

ஏப்ரல் 2006-ல் இந்த பங்குகள் இதே விலைக்கு ($88.72) விற்பதாக வைத்துக் கொள்வோம். உங்களால் $80 விலைக்கு இந்த பங்குகளை வாங்க முடியும். நீங்கள் ஆப்ஷனுக்காக கொடுத்த $10.90 பிரிமியமும் வீண் கிடையாது. இந்த $10.90 பிரிமியத்தில் $8.72 ($88.72 - $80) உங்களுக்கு திரும்ப கிடைத்து விடுகிறது. மீதம் உள்ள $2.18 மட்டும் தான் காற்றில் கரைந்து விட்டது.

மேலே சொன்ன உதாரணத்தில் $8.72 என்பது "ஆப்ஷனின் உண்மையான மதிப்பு" (Intrinsic Value). $2.18 என்பது "நேரத்தின் மதிப்பு" (Time Value).

இன்று பங்குகள் $88.72க்கு விற்கும் போது $80 Strike price-ல் Call ஆப்ஷன் வாங்கும் போது Intrinsic Value $8.72 இருக்கிறது. இதுவே $90 Strike price-ல் Call ஆப்ஷன் வாங்கினால் Intrinsic Value எவ்வளவு இருக்கும்? பெரிய பூஜ்யம். வெறுமனே Time value மட்டும் தான் இருக்கும். இந்த ஒரு காரணத்துக்காகவே பங்குகளின் விலையை விட அதிகமாக உள்ள Strike price-ல் Call ஆப்ஷனை வாங்க கூடாது. (Covered call விற்கலாம், அதை வாங்குபவர் தானே கஷ்டப்பட போகிறார்)

Intrinsic Value இல்லாத ஆப்ஷனை வாங்குவது லாட்டரி வாங்குவதற்கு சமம். வெறும் Time Value மட்டும் இருக்கும் போது ஆப்ஷனின் விலை மிக குறைவாக இருக்கும், ஆனால் அதனால் எந்த பயனும் கிடையாது. ஆப்ஷன் பாகம் 1,2-ல் பார்த்த மைக்ரோசாப்ட் நவம்பர் 2005க்கான $30 Call ஆப்ஷன் ஞாபகம் உள்ளதா? அதை வாங்கிய அனைவருக்கும் நஷ்டம்.

3. In-the-money, Out-of-the-money, At-the-money and Where is my money?!

IBM பங்குகள் $88.72க்கு விற்கிறது. $85 அல்லது $85க்கும் குறைவான விலையில் உள்ள Call ஆப்ஷன்கள் "In-the-money (ITM)" என்ற பிரிவில் உள்ளன. Strike Price பங்கு விலைக்கு உள்ளே (within the price of stock) இருப்பதால் இப்படி பெயர்.

$90 அல்லது $90க்கும் அதிகமான விலையில் உள்ள Call ஆப்ஷன்கள் "Out-of-the-money (OTM)" என்ற பிரிவில் உள்ளன. Strike Price பங்கு விலைக்கு வெளியே (Outside the price of stock) இருப்பதால் இப்படி பெயர்.

பங்கு விலையும் Strike price-ம் ஒரே விலையில் இருந்தால் Call ஆப்ஷன்கள் "At-the-money (ATM)" பிரிவில் இருக்கும்.

Call ஆப்ஷன் வாங்கும் போது In-the-money Call options வாங்குவது தான் நல்லது. அதே போல Call ஆப்ஷன் விற்கும் போது Out-of-the-money Call options விற்றால் லாபம் பார்க்கலாம்.

Call ஆப்ஷனும் Put ஆப்ஷனும் எதிர் துருவங்கள். அதனால் Put ஆப்ஷனில் ITM (In-the-money) மற்றும் OTM (Out-of-the-money) அப்படியே உல்டாவாக மாறி விடும்.

IBM பங்குகள் $88.72க்கு விற்கிறது.
$90 Strike Price-ல் உள்ள Put ஆப்ஷன்கள் ITM வகையை சேர்ந்தவை.
$85 Strike Price-ல் உள்ள Put ஆப்ஷன்கள் OTM வகையை சேர்ந்தவை.

ATM(At the money) வகை மட்டும் Call ஆப்ஷனுக்கும் Put ஆப்ஷனுக்கும் ஒரே மாதிரி இருக்கும்.

4. Delta:

ஒரு பங்கின் விலை ஏறும் போதோ அல்லது இறங்கும் போதோ எல்லா ஆப்ஷன்களும் ஒரே மாதிரி ஏறுவதோ அல்லது இறங்குவதோ கிடையாது. பங்கின் விலை மாறும் போது ஆப்ஷனின் விலை எப்படி மாறும் என்பதை காட்டுவது தான் “டெல்டா”.

மைக்ரோசாப்ட் இன்று $28க்கு விற்கிறது. ஜனவரி 2006க்கான $27.5 Call ஆப்ஷனுக்கான டெல்டாவின் மதிப்பு 0.67. மைக்ரோசாப்ட் பங்குகள் $1 மேலே போனால் இந்த ஆப்ஷன் விலை 67 பைசா மேலே ஏறும்.

பங்கு விலையை விட Strike Price அதிகமாக உயர உயர டெல்டா குறைந்து கொண்டே வரும். டெல்டா அதிகமாக இருக்கும் ஆப்ஷன்களை தான் வாங்க வேண்டும். பங்கின் இன்றைய விலை $90. அதன் $85க்கான Call ஆப்ஷனை $6 விலைக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆப்ஷனின் டெல்டாவின் மதிப்பு 0.75.

இந்த பங்கின் விலை நாளை $92க்கு உயர்ந்தால் உங்கள் ஆப்ஷனின் மதிப்பு $1.50 உயர்ந்து ஆப்ஷனின் விலை $7.50க்கு போய் விடும். போட்ட முதலீட்டுக்கு 25% லாபம் கிடைக்கிறது. $85க்கான Call ஆப்ஷனை வாங்காமல் $95க்கான Call ஆப்ஷனை நீங்கள் வாங்கினால் என்னவாகும்? $95 Call ஆப்ஷனின் விலை $1.50 என்றும் அதன் டெல்டா 0.1 என்றும் வைத்துக் கொள்வோம். பங்கின் விலை ஒரு டாலர் எறினால் இந்த ஆப்ஷனின் விலை 10 பைசா உயரும். பங்கின் விலை குறைந்த பட்சம் $4 உயர்ந்தால் தான் 25% லாபம் கிடைக்கும். அது போக OTM Call எல்லாவற்றுக்கும் வெறும் நேர மதிப்பு மட்டும் (Time Value) தான் இருக்கும், அதுவே பெரிய ரிஸ்க்.

5. Gamma:

பங்கின் விலை $1 (அல்லது Rs.1) அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ டெல்டா எவ்வளவு மாறும் என்பதை காட்டுவது Gamma.

டெல்டா என்பது காரின் வேகம் என்று எடுத்துக் கொண்டால், ஆக்சிலிரேட்டர் பெடல் எந்த அளவுக்கு மிதிக்கப் படுகிறது என்பதை சொல்வது Gamma.

6. Theta:

நாட்கள் செல்ல செல்ல ஆப்ஷனின் விலை எவ்வளவு குறையும் என்பதை Theta காட்டும். டிசம்பர் 2005க்கான ஆப்ஷனின் Theta அதிகமாக இருக்கும். ஆனால் ஏப்ரல் 2006க்கான ஆப்ஷனின் Theta குறைவாக இருக்கும்.

உதாரணம்:

IBM December 2005, $85 Call ஆப்ஷனுக்கு Theta-வின் மதிப்பு -0.057.
IBM April 2006, $85 Call ஆப்ஷனுக்கு Theta-வின் மதிப்பு -0.021.

7. Vega:

Volatility மதிப்பு மாறும் போது ஆப்ஷனின் விலை எந்த அளவுக்கு மாறும் என்பதை காட்டுவது Vega.

இவ்வளவு தூரம் நீங்கள் பொறுமையாக படித்து வந்ததற்காக:

ஆப்ஷனின் விலை எப்படி நிர்ணயிக்கப் படுகின்றது என்பதை பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் இங்கு செல்லவும். http://bradley.bradley.edu/~arr/bsm/model.html

ஆப்ஷனை கணக்கிடும் Java Applet இங்கு உள்ளது. US $ என்று இந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தாலும் எந்த நாட்டு சந்தைக்கும் இது பயன்படும்.
http://www.margrabe.com/OptionPricing.html

அமெரிக்க சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் Volatility மதிப்புகளை தெரிந்து கொள்ள http://www.ivolatility.com/ பயன்படும்.

மேலே நாம் கண்ட அத்தனை மதிப்புகளையும் அறிந்து கொள்ள ஒரு காலத்தில் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது ரொம்ப சிம்பிளாகி விட்டது. Optionsxpress தளத்தில் அத்தனை விபரங்களும் எனக்கு கிடைக்கிறது. இதே போல இந்திய பங்கு சந்தையின் தரகர் வலை தளங்கள் இருந்தால் சொல்லுங்கள், அந்த விபரங்களையும் இங்கு எழுதி விடலாம். எந்த ஒரு ஆப்ஷனையும் வாங்கும் முன்போ அல்லது விற்கும் முன்போ Volatility, Delta மற்றும் Gamma மதிப்புகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். Volatility-ஐ பொறுத்து ஆப்ஷனை வாங்குவதா அல்லது விற்பதா என்று முடிவு செய்யுங்கள். டெல்டாவின் மதிப்பை பொறுத்து எந்த ஆப்ஷனை வாங்குவது/விற்பது என்று முடிவு செய்யுங்கள்.

இந்திய பங்கு சந்தையில் டிரேடு செய்யப்படும் சில ஆப்ஷன்களைப் பற்றி எழுதலாம் என்று விபரங்களை தேடிப் பார்த்தேன். நல்ல விபரங்கள் எதுவும் சிக்க வில்லை. Indiainfoline.com என்ற தளத்தில் போனால் ஏப்ரல் 2005 மாதத்துக்கான விலைகளை மட்டுமே இந்த தளம் (http://www.indiainfoline.com/stok/infu/) காண்பிக்கிறது. ICICIdirect.com இன்னும் வேஸ்ட்.

http://www.indiainfoline.com/stok/opti/index.html என்ற சுட்டியில் எந்த பங்குகளுக்கு ஆப்ஷன்கள் டிரேடு செய்யலாம் என்று காண்பிக்கிறார்கள். ஆனால் இந்த ஆப்ஷன்களின் விலை எவ்வளவு என்று எங்கே தெரிந்து கொள்ள முடியும்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். அடுத்த பாகத்தில் நம் ஊர் ஆப்ஷன்களைப் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். SEBI வலைத்தளத்தில் “Lot size” என்பதைப் பற்றி வித்தியாசமாக எழுதியிருந்தார்கள். அமெரிக்க சந்தையில் ஒரு ஆப்ஷன் ஒப்பந்தம் எபோதுமே 100 பங்குகளை கட்டுப்படுத்தும். ஆனால் நம் ஊர் பங்கு சந்தையில் ஒரு ஒப்பந்தத்துக்கான பங்குகளின் எண்ணிக்கை பங்குகளின் விலையை பொறுத்து மாறுபடுகிறது. எதையும் சிம்பிளாக விட மாட்டார்கள் போல இருக்கிறது.

அடுத்த பாகத்துடன் இந்த தொடர் முடியும்.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 7

Thursday, December 08, 2005

பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே கணிக்க முடியுமா?

பூகம்பத்தை மனிதர்கள் உணரும் முன்பே மிருகங்களால் உணர முடியும் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேக கூட்டங்களால் பூகம்பத்தை முன்கூட்டியே உணர முடியுமா? ஆமாம் என்கிறார் நியூயார்க்கில் வாழும் ஸாங்கோ ஸௌவ் (Zhonghao Shou) என்பவர். பூகம்பம் ஏற்படுவதற்கு சில தினங்கள் முன்பாகவே பூமியின் தட்டுகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. அதனால் அந்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் 300 டிகிரி செல்சியஸிலிருந்து 1500 டிகிரி செல்சியஸ் வரை சூடாகின்றது. இந்த சுடு நீர் வெப்பக் காற்றாக மேலே எழுந்து வித்தியாசமான வடிவங்களை உடைய மேக கூட்டங்களாக கூட்டமாக கூடுகிறது என்று ஸாங்கோ சொல்கிறார். இந்த வடிவங்கள் அரிக்கன் விளக்கு போலவோ, பாம்பு போலவோ அல்லது நேர் கோடு போலவோ தோன்றும் என்று கூறுகிறார்.

தன்னுடைய கணிப்புகள் இது வரை எப்படி உண்மையாகி உள்ளது என்று தன் வலைதளத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். விபரங்களுக்கு இங்கு செல்லவும். அக்டோபர் 8ம் தேதி அன்று பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தை செப்டம்பர் 28ம் தேதியே கணித்து விட்டதாக கூறுகிறார். உண்மையாக இருக்கலாம். பாகிஸ்தான் பூகம்பத்துக்கு பிறகு தான் இந்த வலைத்தளத்தை நான் பார்த்தேன். அக்டோபரிலிருந்து இவருடைய கணிப்பை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

அக்டோபர் 6ம் தேதி அன்று வடக்கு கலிபோர்னியாவில் 4.8 அல்லது அதற்கும் மேல் மதிப்புள்ள பூகம்பம் வரலாம் என்று கணித்திருந்தார். நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.இலங்கைக்கு கிழக்கே ரிச்சர் ஸ்கேலில் 5க்கு மேல் மதிப்புள்ள பூகம்பம் வரும் என்று கணித்திருந்தார். அக்டோபர் 16ம் தேதி அன்று அப்படி ஒரு பூகம்பம் வந்ததாகவும் தன்னுடைய வளைத்தளத்தில் எழுதியுள்ளார். விபரங்கள் இங்கே: http://quake.exit.com/images_2005_5.htm. அப்படி ஒரு பூகம்பம் நடந்ததாக நான் படிக்கவில்லை, உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்கள். அதே போல இந்தியாவில் கேரளவுக்கு மேலே உள்ள பகுதிகளில் 6.5க்கு பூகம்பம் வரும் என்று அக்டோபர் 14 அன்று கணித்திருந்தார். பத்து நாட்களில் “நான் கணித்தது தவறாக இருக்கலாம்” என்று சொல்லிவிட்டார். தான் சொல்லியது சரி தான் என்று மல்லுக்கட்டாமல் “Sorry, it may be wrong” என்று சொல்லிவிடுகிறார். போன வருடம் டிசம்பர் 26 அன்று தமிழகத்திலும் இலங்கையிலும் கொடூர தாண்டவம் நடத்திய சுனாமி உருவானது கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் தான். அந்த பூகம்பத்தை டிசம்பர் 13ம் தேதி அன்றே கணித்திருக்கிறார்.மேலும் விபரங்களுக்கு http://quake.exit.com/images_2004_6.htm. இந்தோனிஷியாவில் “Geoeruption” ஏற்படும் என்று இவரால் சொல்ல முடிந்திருக்கிறது. தன் சொந்த செலவிலும் மற்றவர்களின் நன்கொடை மூலமாகவும் பூகம்ப ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து வருகிறார். அக்டோபர் 30, 2005க்கு பிறகு சீனாவுக்கு சென்று விட்டார். பிப்ரவரியில் திரும்ப வர போவதாக அவர் வலைத்தளம் சொல்கிறது.

புவியியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் இவரின் கண்டுபிடிப்புகளை பற்றி முழுமையாக என்னால் கருத்து சொல்ல முடியவில்லை. ஆனாலும் இவரது வலைத்தளத்தில் உள்ள புகைப்பட ஆதாரங்களை பார்க்கும்போது இவர் மேல் மரியாதையும் நம்பிக்கையும் வருகிறது.

Monday, December 05, 2005

ஹை-டெக் விவசாயி

கடலூருக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் திருப்பாபுலியூர். தமிழரசன் அந்த ஊரில் விவசாயம் செய்கிறார். தனது பத்து ஏக்கர் நிலத்திலும் வெங்காயம் பயிரிட்டிருக்கிறார். தன் நிலத்தையும் பயிரையும் கண்காணிக்க அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை.

தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து தனது லேப்டாப் கம்ப்யூட்டரின் மூலம் தன் நிலத்தின் ஈரப்பதத்தை செக் செய்ய முடியும். தன் வயல் வரப்பின் எல்லைகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க முடியும். பிடிக்காதவன் மாடு தன் நிலத்துக்குள் புகுந்தால் கொஞ்சமாக ஷாக் கொடுத்து விரட்ட முடியும். பிடிக்காதவன் நுழைந்தால் அவனுக்கும் ஷாக் கொடுக்கலாம், ஆனால் அரசாங்கம் அனுமதிக்காததால் ஒலி பெருக்கி மூலம் பேசி விரட்ட முடியும். தமிழரசனின் வயலை சுற்றி போடப் பட்ட வேலியில் ஆங்காங்கே
ஒலிபெருக்கிகளும் வெப் கேமராக்களும் பொருத்தப் பட்டிருக்கின்றன.

தமிழரசன் தன் நிலத்தின் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட முடியும், அவர் நிலத்தில் கால் வைக்காமல். தன் பயிரை வாங்கும் நிறுவன அதிகாரிகளுடன் மின்னஞ்சலில் வியாபாரம் பேச முடியும். இன்று சென்னையில் வெங்காயம் என்ன விலை விற்கிறது, தன்னிடம் வெங்காயம் வாங்கும் நிறுவனம் தன்னை ஏமாற்றுகின்றதா என்பதையெல்லாம் சில பட்டன்களை தட்டி அவரால் திரிந்து கொள்ள முடியும்.Wi-Fi தொடர்பும், லேப்டாப் கம்ப்யூட்டரும் அவருக்கு உதவி செய்கிறது.

Wi-Fi தொடர்பின் மூலம் தன் நிலத்தின் ஒவ்வொரு சதுர அடியையும் தமிழரசனால் கண்காணிக்க முடிகிறது. தன் கிராமத்தில் சுனாமியாலோ பலத்த மழையினாலோ பாதிப்பு ஏற்பட்டால் வெளி உலகத்துடனும் மற்ற விவசாயிகளுடனும் தொடர்பு கொள்ள Wi-Fi தொடர்பு அவருக்கு உதவுகிறது.

ம்...கேட்கவே நன்றாக இருக்கிறது. அமெரிக்காவில் Oregon மாநிலத்தில் உள்ள Hermiston என்ற சின்ன கிராமத்தில் (மக்கள் தொகை 11,000) இது நிஜமாகி விட்டது. Subway என்ற உணவகத்தில் பயன்படுத்தப்படும் சிவப்பு வெங்காயங்கள் Wi-Fi தொடர்பின் உதவியால் இந்த கிராமத்தில் பயிர் செய்யப்பட்டவை.

இன்னும் சில வருடங்களில் இந்த கனவு இந்தியாவிலும் நனவாகும். DSL அல்லது கேபிள் மூலம் கிடைக்கும் இன்டர்நெட் தொடர்பின் விலையை விட Wi-Fi தொடர்பின் விலை குறைவு. ஏற்கனவே நம் ஊரில் விலை மலிவான கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தி விட்டார்கள். வட இந்தியாவில் சில கிராமங்களில் விவசாயிகள் கம்ப்யூட்டரின் மூலம் தன் பயிர்களை எந்த விலைக்கு விற்கலாம் என்று தீர்மானிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருந்தால் நம் ஊர் விவசாயிகள் கம்ப்யூட்டரின் மூலம் பயிர் செய்வார்கள். "காலத்தே பயிர் செய்" என்ற சொல் மாறி "கம்ப்யூட்டரே..பயிர் செய்" என்றாகி விடும்.

இது போல நடக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் ஆசைப்படுகிறேன். என் மேனேஜரின் தொல்லை தாங்கவில்லை. கோயம்பத்தூர் பக்கம் ஒரு கிராமத்தில் போய் செட்டிலாகி, திண்ணையில் உட்கார்ந்து லேப்டாப்பின் உதவியால் விவசாயம் செய்யலாம். மாலை நேரங்களில் போரடித்தால் நாஸ்டாக்கில் கொஞ்சம் பணம் செய்யலாம். ஒரு பக்கம் விவசாயம், இன்னொரு பக்கம் கூகுளும் மைக்ரோசாப்டும். இது எப்படி இருக்கு?!

குறிப்பு: ஆப்ஷனின் அடுத்த பாகத்தை எழுதுகிறேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டே இருக்கிறேன். எல்லோரும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி இன்னும் சரியாக வரவில்லை. ஈ-கலப்பையும் இன்னும் சரிவர பிடிபட வில்லை. இன்னும் சில நாட்களுக்குள் அடுத்த பாகம் வந்து விடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...