Saturday, November 05, 2005

Google மேனியா

Google பங்குகள் பறப்பதை பார்த்தால், 1998-2000ல் நடந்த நிகழ்ச்சிகள் கண்முண் தோன்றுகிறது. JDSU, Amazon, CMGI, Ciena போன்ற பல பங்குகள் ஒரே நாளில் $10, $20 என்று எகிறும். அவசரப்பட்டு வாங்க வேண்டாம், சில நாள் பொறுத்திருக்கலாம் என்று பொறுத்திருப்பேன். பங்குகள் விலை கீழே வரும் என்று காத்திருப்பேன். கடைசியில் வெறுத்துப் போய் வந்த விலைக்கே பங்குகளை வாங்கி அதிலும் நிறைய லாபம் பார்த்தேன்.

CMGI ஆப்ஷனில் ஒரே நாளில் $10,000 லாபம் பார்த்த காலம் உண்டு. அது நிஜமாகவே ஒரு கனா காலம். அந்த கனவு முடிந்த போது எங்கு பார்த்தாலும் ரத்த ஆறு. JDS Uniphase (JDSU) பங்கு $240லிருந்து சரிந்து $2க்கு விற்கிறது. CMGI $1 சொச்சம். இதே கதி Googleக்கு வர வாய்ப்பில்லை. ஆனால், எதிர்பார்ப்புகள் பொய்யாகும் போது பணம் போட்டவர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடப் போகிறார்கள், விலை சரிய போகிறது. அப்படியே சரிந்தாலும் $400லிருந்து $300க்கு போகுமே தவிர $100க்கு கீழே போக வாய்ப்பில்லை.

Google-ன் P/E விகிதம் 86, Yahoo-ன் P/E விகிதம் 35. ஆனால் Google-ன் EPS(ஒரு பங்குக்கான லாபம்) அதிகம். Google பங்கு மார்க்கெட்டில் வெளியிட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவு, அதிக EPS-க்கு அதுவும் ஒரு காரணம். இன்னும் பல காரணங்களை எழுதி கொண்டே போகலாம். எல்லாவற்றையும் விட மக்களின் எதிர்பார்ப்பு ஒரு முக்கிய காரணம். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஜிம் கிரேமர் (Thestreet.com, Madmoney show) போன்ற ஆட்கள் 2006-ல் Google பங்கு $450க்கு விற்கும் என்று ஆருடம் சொல்கிறார்கள்.

Google பங்குகள் அடுத்த வருடம் $450க்கு போகுமா $45க்கு போகுமா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். இன்னும் பல நாட்களுக்கு, குறைந்த பட்சம் Jan 2006-ல் Google லாப நஷ்ட கணக்கை வெளியிடும் வரை, Google மேனியா தொடரும். அது வரை கிடைத்த பணத்தை அள்ளப் போகிறேன். கடந்த மூன்று வாரங்களில் இரு தடவை Google put ஒப்பந்தத்தை விற்று கொஞ்சம் பணம் சம்பாத்தித்தேன். அதன் விபரங்கள் இங்கே இருக்கிறது. December 340 put ஒப்பந்தத்தை $930க்கு விற்றேன், இப்போது அது $300க்கு விற்கிறது. அது $200க்கு போகும் போது திரும்ப வாங்கலாம் என்று யோசனை.

Google-ல் பணம் செய்ய சில யோசனைகள்:

1. 100 பங்குகளை $390க்கு வாங்கலாம், வாங்கியவுடன் நவம்பர் 2005, $390க்கான Call ஒப்பந்தத்தை $990க்கு விற்று விடலாம். நவம்பர் 18 அன்று Google $390க்கும் மேலே விற்றால் உங்களுக்கு $990 லாபம். 100 பங்குகளை வாங்குவதற்கு $39,000 செலவு செய்ய வேண்டும். Margin-ல் வாங்க உங்கள் தரகர் அனுமதித்தால் 19,500 முதலீடு செய்தால் போதும். $19,500க்கு $990 லாபம் (தரகர் கமிஷனை இதில் சேர்க்க வில்லை). ஆப்ஷன் - பாகம் 1,2- ல் பார்த்த covered call முறை இது.

2. நீங்கள் இரும்பு நெஞ்சம் கொண்டவராய் இருந்தால் நவம்பர் 2005, $350 call ஒப்பந்தம் ஒன்று வாங்கலாம். $4170 செலவு. Google $400க்கு போனால் இந்த call ஒப்பந்தம் $5000க்கு போகும். என்னைப் போன்ற பயந்த ஆளாக இருந்தால் ஜனவரி 2006, $350 call ஒப்பந்தம் வாங்கலாம். எது வாங்கினாலும் stop loss போட்டு விட்டால் நிம்மதியாக தூங்கலாம். தப்பி தவறி நவம்பர் 2005, $400+ call ஒப்பந்தங்களை வாங்கி விட கூடாது.

3. Google பங்குகள் சிலவற்றை $390+க்கு வாங்கலாம். $450-ஐ எட்டும் போது பாதி பங்குகளை விற்று விட்டு மீதி பங்குகளை $400க்கு stop loss போட்டு வைத்து கொள்ளலாம். Google பங்கு $450க்கு மேலே போய் கீழே சரிய ஆரம்பித்தால் பங்குகளை $400க்கு stop loss order விற்று விடும். போன வருடம் $145க்கு Google பங்குகள் சிலவற்றை வாங்கினேன், Google-ன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கும் வரை அதை விற்க போவதில்லை.

பங்கு சந்தை ஒரு வகை சூதாட்டம். Las vegas போவது போன்றோ, லாட்டரி வாங்குவது போலவோ அவ்வளவு மோசமான சூதாட்டமில்லையென்றாலும் பங்கு சந்தை மனிதர்களும் மிருகங்களும் சேர்ந்து உலாவும் ஒரு காடு. தினந் தோறும் இவர்களுடன் தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஒரே நாளில் ஒரு பங்கின் தலைவிதி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மேலே சொன்னதில் இரண்டாவது யோசனை அதிக ரிஸ்க்கானது. கவனம் தேவை.


Disclaimer: நான் பங்குகளை வாங்க, விற்க அறிவுரை கொடுக்க வில்லை. என்னுடைய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஆராய்ச்சிக்கு அதை பயன் படுத்தி கொள்ளுங்கள்.

2 comments:

Boston Bala said...

Useful opinions :-) My sincere thanks.

--$400லிருந்து $300க்கு போகுமே தவிர $100க்கு கீழே போக வாய்ப்பில்லை--

true... They really seem to have many tricks up the sleeve. Adsense itself is innovative; by extrapolating it to print-media and buying single page ads of prominent mags for re-distribution, clasified ads, e-bay countering; they have many strategic paths ahead of them.

Thanks for your suggestions.

Bharathi said...

You are welcome. My thanks to you for the feedback.

Related Posts Plugin for WordPress, Blogger...