Wednesday, November 16, 2005

பங்கு தரகர்களின் வலைத்தளத்தில் கொள்ளை

நீங்கள் பங்கு தரகர்களின் வலைத்தளங்களை உபயோகிப்பவராக இருந்தால், இதை படிக்கவும்.

முன்பெல்லாம் வங்கிகளை கொள்ளையடிக்க ஆள் பலம் வேண்டும், குறி தவறாமல் துப்பாக்கி சுட தெரிந்திருக்க வேண்டும், நிறைய முகமூடிகள் வைத்திருக்க வேண்டும். இப்போது கத்தியின்றி ரத்தமின்றி கொள்ளையடிக்கின்றனர், இன்டர்நெட்டின் உதவியால். கடந்த சில மாதங்களில் மட்டும் 20 மில்லியன் டாலர்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன -- கீழ்க்கண்ட முறையை உபயோகித்து.

அமெரிக்காவின் கிழக்கு கரையில் உள்ள ஒரு பல்கலை கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார் திரு. மூர்த்தி. E-trade தரகர் கணக்கில் $174,000 மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளார். இரண்டு மாதம் விடுமுறைக்காக ஆந்திரா சென்று திரும்புகிறார். E-trade தரகரிடம் இருந்து நிறைய தபால்கள் அவருக்காக காத்திருக்கின்றன். அதன் சாராம்சம் -"தாங்கள் விரும்பிய படி அத்தனை பங்குகளையும் விற்று, நீங்கள் சொன்ன வங்கி கணக்குக்கு wire transfer செய்து விட்டோம்". அதிர்ச்சியடைந்த மூர்த்தி தரகருக்கு போன் செய்கிறார். அவர் கணக்கில் ஒரு பைசா கூட கிடையாது. அவ்வளவு பணமும் வெல்ஸ் பார்கோ வங்கியின் நியூயார்க் கிளையில் ஒரு போலி கணக்குக்கு அனுப்பப்பட்டு , அங்கிருந்து ரஷ்யாவுக்கு போய்விட்டது.

இது ஏதோ கதை கிடையாது. உண்மை.

இது எப்படி நடந்தது? மூர்த்தியின் கம்ப்யூட்டரில் Firewall, Anti-virus software போன்ற சமாசாரங்கள் இல்லை. அதனால் ஹேக்கிங்க் செய்யும் மக்கள் சில வார்ம் போன்ற வஸ்துக்களை அவர் கணிணியின் உள்ளே விட்டு அவர் டைப் செய்வதை பதிவு (keylogging) செய்கிறார்கள். தரகரின் பெயர், வலைத்தளத்தின் பதிவுபெயர், சங்கேத வார்த்தை எல்லாம் கிடைத்து விடுகிறது. தரகரின் வலைத்தளத்திலே logon செய்து முதல் வேலையாக தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரியை மாற்றி தங்களின் மின்னஞ்சல் முகவரியை போட்டு விடுகிறார்கள். அந்த கணக்கில் உள்ள அத்தனை பங்குகளையும் மார்க்கெட் விலைக்கே விற்று விடுகிறார்கள். (மின்னஞ்சல் முகவரி மாற்றப் பட்டதால், பங்குகளின் சொந்தக்காரர்களுக்கு உடனே விஷயம் தெரியாது. தபால்காரர் வெடிகுண்டை கொடுக்கும் போது தான் தெரியும்.)

இப்போது கணக்கில் உள்ளது பணம் மட்டும் தான். தாங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் போலி வங்கி கணக்குகளுக்கு அத்தனை பணத்தையும் wire transfer செய்து விடுகிறார்கள். வங்கிகளில் பணம் சேர்ந்தவுடன் அதை ரஷ்யாவுக்கோ அல்லது பிரேசிலுக்கோ கொண்டு செல்வது Organized Crime மக்களுக்கு ரொம்ப சாதாரணம்.

இது போன்ற கொடுமை மூர்த்திக்கு மட்டுமல்ல, யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த நாட்டிலும் நடக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் Firewall இல்லையென்றால் Zonealarm நிறுவனத்தின் இலவச மென்பொருளை download செய்து வைத்துக் கொள்ளுங்கள். Anti-virus மென்பொருளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

தரகர்களும் இந்த விஷயத்தில் ரொம்ப ஆடிப் போயிருக்கிறார்கள். "நாங்கள் நன்றாக பாதுகாப்புடன் தான் இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் தான் தங்கள் வீட்டு சாவியை திருடர்களிடம் கொடுத்து விட்டு எங்கள் மேல் பழியை போடுகிறார்கள்" என்று புலம்புகிறார்கள். இது போல நிறைய கொள்ளைகள் நடந்தால் தங்களின் வியாபாரம் போய் விடுமோ என்று பயப்படுகிறார்கள். நியாயமான பயம் தான்.

22 comments:

முத்து(தமிழினி) said...

right advice at right time

Anonymous said...

useful info..thanks..

Bharathi said...

Thanks to both of you for the feedback.

வாய்சொல்வீரன் said...

இந்தப் பதிவை படிங்க. இந்தப் பதிவிலிருந்து ஒரு வார்த்தை 'பணம் தேவை இல்லை. மனம் தான் தேவை'. நம்ம நாட்டுக்கு இப்போ ரொம்ப தேவையான விஷயத்தை எழுதியிருக்கார்.

http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_17.html

Bharathi said...

வாய்சொல் வீரன்: அந்த பதிவை முன்பே படித்து விட்டேன். அதை ஏன் இங்கே குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. பணம் சம்பாதிப்பதையும் சேமிப்பதையும் பற்றி எழுதுவது தவறா?!

வாய்சொல்வீரன் said...

நிச்சயம் தவறில்லை பாரதி. ஆனால் 'எந்தகாலத்திலும் இந்தியா முன்னேறாது' என்று அந்தப் பெரியவர் சொன்னது தான் தவறு. நீங்கள் அவர் எழுத்தைப் பாராட்டுபவர் அல்லவா? அதனால் உங்களை அந்த பதிவை படிக்க சொன்னேன். உங்கள் வலைப்பதிவில் 'தமிழ் நிதி'யை பற்றி எழுதுவது நம் மக்களுக்கு மிகவும் உதவியாக தான் இருக்கும். ஆனால் உண்மையான இந்தியனாய், மலேசியா பெரியவர் நம் நாட்டை பற்றி கூறியதற்கு உங்கள் கருத்து என்னவென்று பதியுங்கள்.

Bharathi said...

இதென்ன வம்பாக போய்விட்டது! என்னுடைய சமீபத்திய பின்னூட்டத்தை நீங்கள் பார்க்கவில்லை போலும். கிழட்டு அனுபவங்கள் இறுதிப்பகுதியில் என் பின்னூட்டத்தை பாருங்கள். என்னைப் பொறுத்த வரை அவர் நம்மை மட்டம் தட்டுவதற்காக சொன்ன மாதிரி தெரியவில்லை. இது ரொம்ப எமொஷனலான விஷயம். ஒவ்வொருத்தரும் இதை வெவ்வேறு மாதிரி handle செய்வார்கள்.

வாய்சொல்வீரன் said...

இப்போதுதான் படித்தேன். நன்றி பாரதி.

குமரன் (Kumaran) said...

திரு. பாரதி. மிக நல்ல விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். தலைப்பைப் பார்த்தவுடன் பங்குச் சந்தையில் இருப்பவர்கள் மட்டுமே பயப்பட வேண்டிய ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணினேன். முழுவதும் படித்தப்பின் தான் தெரிந்தது இது கணினி மூலம் நடக்கும் எல்லா transactionக்கும் பொருந்தும் என்று. இதை எல்லாரும் படிக்க வேண்டும். வழக்கும் போல் + போட்டுவிட்டேன்.

Bharathi said...

திரு. குமரன், மிக்க நன்றி.உங்கள் எழுத்துக்கள் மேலும் எனக்கு உற்சாகம் கொடுக்கிறது. + போடுவது யார் என்று கண்டு பிடித்து விட்டேன். :-)

தரகர் வலைத்தளங்களை பற்றி மட்டும் தான் எச்சரிக்கை கொடுத்து எழுதியிருந்தேன். ஆனால், நீங்கள் சொன்னது சரி தான். இது எந்த வலைத்தளத்திலும் நடக்க சாத்தியம் உள்ளது.

குமரன் (Kumaran) said...

எனக்குப் பிடித்த வலைப்பதிவு ஏதோ ஒன்றின் சுட்டியை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு 40 நண்பர்களுக்கு அனுப்புவது என் வழக்கம். இன்று இந்த வலைப்பதிவின் சுட்டியை அனுப்பினேன். அதில் இதுவரை செந்தில் குமரன் மட்டும் பின்னூட்டம் போட்டுள்ளார். மற்றவர்கள் படித்துவிட்டு சென்று விட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

மூர்த்தி said...

அருமையான அறிவுரைகள் பாரதி.

நன்றி.

Bharathi said...

குமரன், கேட்க சந்தோஷமாக உள்ளது. நன்றி.

மூர்த்தி, நன்றி.

Abi Baski said...

thanks for sharing this.. BASKARAN

Bharathi said...

Baskaran, you are welcome.

R. John Christy said...

Dear Bharathi,
Great work. One help please. Please tell me How to publish in Tamil in Blog spot.
Please reply at
hellochri-mail@yahoo.com
Thanks

Anonymous said...

Nalla ubayogamana thagaval koduthatharkku nandri.

Kumaresh

Bharathi said...

Kumaresh, Thanks for the feedback.

அன்பு said...

பாரதி,
அன்றைக்க்கு முதல்முறை வாசித்தபோதே கதிகலங்கிப்போச்சு... அவசரத்தில் + போட்டுட்டு ஓடிப்போய் இறக்கி நிறுவியிருக்கிறேன் Zone Alarm

தகவலுக்கு நன்றி.

Bharathi said...

அன்பு, நன்றி. இரண்டு நாளுக்கு முன்னால் இன்னொரு செய்தி. Symantec போன்ற பாதுகாப்புக்கான மென்பொருள்களில் உள்ள ஓட்டையை கண்டுபிடித்து அதிலும் Hackers விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.முன்னை விட இன்னும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

மதுமிதா said...

நன்றி பாரதி.
+ போட்டாச்சு
நம்ம அலுவலகத்துக்கும் இந்த
விஷயத்தை சொல்லியாச்சு

Bharathi said...

மதுமிதா, நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...