Monday, October 10, 2005

ஸ்டாக் புரோக்கர்கள்

1998-ல் ஸ்டாக் வாங்குவதற்கு $80 கமிஷன் கொடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் Smith Barney மட்டும் தான் எனக்கிருந்த சாய்ஸ். இன்டர்நெட்டின் உதவியால் இந்த விலை ரொம்ப குரைந்து விட்டது. கடந்த 6 வருடங்களாக Brown & Co (http://www.brownco.com) -வை உபயோகித்து வருகிறேன். மிகச்சிறந்த கம்பெனி. நீங்கள் ஸ்டாக் வாங்கி விற்பதற்கு இவர்களை விட சிறந்தவர்கள் யாரும் கிடையாது. ஆனால் Options வாங்கி விற்பதற்கு OptionsXpress (http://www.Optionsxpress.com) தான் சிறந்த கம்பெனி. Options பற்றி இன்னொரு நாள் விளக்கமாக எழுதிகிறேன். இந்த 2 கம்பெனிகளிலும் நான் trade செய்கிறேன்.

இருப்பதிலேயே மட்டமான கம்பெனி சார்லெஸ் ஷ்வாப் (Charles Schwab). இந்த கம்பெனியின் சர்வீஸ் படு மட்டம், கமிஷன் விலை ரொம்ப அதிகம். இவர்களை விட்டு ஒதுங்கி இருப்பது உங்கள் பணத்துக்கு நல்லது! Fidelity, E-trade போன்ற கம்பெனிகளையும் நான் உபயோகித்துள்ளேன், அவர்கள் பரவாயில்லை. நிறைய கம்பெனிகளில் கணக்கு வைத்திருந்தால் தலை சுற்றும் என்பதால் Brown & OptionsXpress கம்பெனிகளை மட்டும் நம்புகிறேன். (ஸ்டாக் மார்க்கெட்டில் சும்மாவே தலை சுற்றுகிறது!)

8 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

நல்ல விதயம். உங்கள் வலைப்பதிவில் இருந்து நிறைய விதயங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி!

-மதி

Mookku Sundar said...

அமெரிட்ரேட் எப்படி..?

பாண்டி said...

//Options வாங்கி விற்பதற்கு OptionsXpress (http://www.Optionsxpress.com) தான் சிறந்த கம்பெனி. Options பற்றி இன்னொரு நாள் விளக்கமாக எழுதிகிறேன்//

எழுதுங்கள் காத்திருக்கிறோம் படிப்பதற்கு!

Bharathi said...

அமெரிடிரேட் நிறுவனத்தை நான் பயன்படுத்தியது கிடையாது. அவர்கள் 25 இலவச ட்ரேடுகள் (இதை எப்படி தமிழில் எழுதுவது?) தருவதாக கேள்விப்பட்டேன், அது உண்மையாக இருந்தால் கொஞ்ச நாட்கள் உபயோகித்து பாருங்களேன். சேவை பிடிக்காவிடில் வேறு நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளலாம். நீங்கள் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது பங்குகளை வாங்கி விற்கவில்லையென்றால், சில நிறுவனங்கள் inactivity fee என்று போட்டு தாளித்துவிடும். நான் அடிக்கடி பங்குகளை வாங்கி விற்பதில்லை, அதனால் இந்த கட்டணம் இல்லாமல் இருப்பது எனக்கு முக்கியம். அமெரிட்ரேட் இந்த மாதிரி ஏதாவது கட்டணம் வசூலிக்கிறதா என்று தெரியவில்லை.

அன்பு said...

வணக்கம் பாரதி.
உங்களின் இந்த புதிய வலைப்பதிவை இன்றுதான் பார்க்கிறேன். வலைப்பதிவுலகுக்கு வருக வருக.
தொடர்ந்து இதுபோன்று நிறைய விடயங்கள் எழுதுங்கள். ஏற்கனவே நண்பர் சசி tamilstock.blogspot.com எழுதி வருகிறார். நீங்களும் உங்களுடைய அனுபவங்களை, ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ட்ரேடுகள் (இதை எப்படி தமிழில் எழுதுவது?)
பரிவர்த்தனை

Anonymous said...

How about Scottrade? Is it good?

Bharathi said...

I am not sure, I haven't used Scottrade. I use Brown, they charge me only $5 for shares trade.

kleinoooo said...

Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!

I have a senior advisor site. It pretty much covers financial services marketing stuff.

Come and check it out if you get time :-)

Related Posts Plugin for WordPress, Blogger...