Sunday, October 09, 2005

அமெரிக்காவில் வீடு வாங்க சரியான நேரம்?

கடந்த 3 வருடங்களாக வீடு மார்க்கெட் அமெரிக்காவில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது, அதுவும் கலிபோர்னியாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். சான் டியாகோ நகரத்தில் 2002-ல் வாங்கிய வீடுகள் 2005-ல் இரண்டு மடங்கு மதிப்பாகி விட்டது, எனக்கு அந்த ஊரில் வேலை கிடைக்காமல் போய் விட்டது! நான் வசிக்கும் Bay area-ல் கூட விலை கூரையை பிய்த்துக் கொண்டு போனது.... கவனிக்க: "போனது"... நான் "போகின்றது" என்று சொல்லவில்லை...

வீடு விலை ஏற்றம் "Bubble" உடைக்கப் படும் நேரம் வந்து விட்டது. நான் எங்கு திரும்பினாலும் "வீடு விற்பனைக்கு" போர்டுகளை பார்க்க முடிகிறது. 5 மாதங்களுக்கு முன்னால் இந்த வீடுகள் 3 வாரத்தில் விற்கப் பட்டுக் கொண்டிருந்தன. இப்போது என் தெருவிலேயே 7 வீடுகள் 6 வாரங்களாக தங்கள் சொந்தக்காரரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. என்னுடைய சிற்றறிவிற்கு எட்டிய இந்த விஷயம் wells fargo வங்கியில் உறுதி செய்யப்பட்டது. National Association of Home Builders/Wells Fargo Housing index 65க்கு விழுந்து விட்டது. கடந்த 2 வருடங்களில் இவ்வளவு கீழே இந்த குறியீடு போனதில்லை. எவ்வளவு வீடுகள் கட்டப்படுகின்றன, வெறும் நிலங்கள் எவ்வளவு வாங்கப்பட்டன, பழைய வீடுகள் எவ்வளவு நாட்கள் விற்கப்படாமல் மார்க்கெட்டில் உள்ளன என்பதையெல்லாம் பொருத்து இந்த index மாறுபடும்.

நீங்கள் இப்போது வீடு வாங்க விரும்பினால் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்தால், குறைந்த விலைக்கு வாங்கலாம். இப்போதே வாங்க வேண்டிய அவசரம் இருந்தால் கேட்கப்படும் விலைக்கு குறைவாகவே பேரம் பேசுங்கள். 99% நீங்கள் கேட்கும் விலைக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

2 comments:

Mookku Sundar said...

ஆனால், இது bubble மாதிரி உடையாது. gradual ஆகத்தான் இறங்கும் என்கிறார்களே. அதி கவனித்தீர்களா...??

சாக்ரமண்டோவிலும் "வீடு விற்பனைக்கு" போர்டு அதிகம் காணக்கிடைக்கிறது. பழிய வீடுகள் மட்டுமல்ல், பெரிய பில்டர்கள் கூட கடந்த இரண்டு மாதங்களாக விலையைக் கூட்டாமல் வைத்து இருக்கிறார்களாம்.

Bharathi said...

நீங்கள் சொல்வது சரி. கொஞ்சம் கொஞ்சமாக தான் விலை இறங்கும். மேலும் இது நகரங்களை பொறுத்தது. சில நகரங்களில் (சான் டியாகோ) வேகமாக இறங்கும், சில நகரங்களில் (சான் பிரான்சிஸ்கோ) கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும், சில நகரங்களில் (டெக்ஸாஸ் மற்றும் ஜார்ஜியா மாநிலத்து நகரங்கள்) பெரிதாக ஒன்றுமே ஆகாது. எந்த அளவுக்கு hype செய்யப்பட்டதோ அந்த அளவுக்கு பாதிப்பு. இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் லாஸ் வேகாஸ் நகரத்தில் மட்டும் இந்த நீர்க்குமிழி வெடிக்காது என்று நிறைய பேர் நம்புகிறார்கள், எனக்கென்னமோ அதில் நம்பிக்கையில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts Plugin for WordPress, Blogger...