Wednesday, October 05, 2005

தொல்லை தாங்கவில்லை

ஜூனியர் விகடனில் (Oct 9 issue) உமாபதி என்பவர் வெளி நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்று பிதற்றியுள்ளார். எங்களுக்கு நம் ஊர் அரசியல்வாதிகளை விட நிறையவே தேசப்பற்று உள்ளது. நம் ஊரில் இந்த மாதிரி பிதற்றல்கள் ரொம்ப அதிகமாகி கொண்டே போகிறது. சில வருடங்களுக்கு முன்னால் எழுத்தாளர் சுஜாதா இப்படி தான் உளறினார், பிறகு அவர் மகன்களே அமெரிக்காவில் வேலை பார்க்க வந்து விட்டனர். ஊருக்கு மட்டும் உபதேசமா?

அப்படி என்ன எங்களுக்கு தேசப்பற்று குறைந்து விட்டது? திரைகடல் ஓடி திரவியம் காணுகிறோம். அதில் என்ன தப்பு? சி.ஐ.ஏ-வில் சேர்ந்து உமாபதியின் வீட்டில் உளவு பார்த்தோமா? அல்லது நம் ஊர் அரசியல்வாதிகள் போல் களவு செய்தோமா? நாட்டை கொள்ளையடித்து சிருதாவூரில் பங்களா கட்டினோமா? நம் நாட்டை சுரண்டும் தேசத்துரோகிகளை பற்றி எழுத உமாபதி போன்றவர்களுக்கு தெம்பு கிடையாது, பல ஆயிரம் மைல் தள்ளியிருக்கும் நம் மீது அவர் பேனா பாய்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்தால் அடுத்த விமானம் பிடித்து ஓடி வரக்கூடிய ஆள் தான் இந்த உமாபதி. அப்படியெல்லாம் எதுவும் நடக்காததால் இந்த வயித்தெரிச்சல் விகடனில் எழுத்தாக கொட்டுகின்றது.

நாம் எல்லாம் வெளி நாட்டினருக்கு கை கட்டி சேவகம் செய்கிறோமாம். சென்னையில் கால் சென்டரில் வேலை செய்பவர்கள் அமெரிக்க குடி மக்களுக்கு சேவை செய்யவில்லையா? TCS, Wipro, Infosys அத்தனை கம்பெனிகளும் எங்கிருந்து இவ்வளவு பணம் குமித்தன? வெளி நாட்டினருக்கு சேவை செய்துதானே? நிறைய அமெரிக்கர்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், இந்த அமெரிக்கர்கள் இந்தியர்களுக்கு கைகட்டி சேவகம் செய்கிறார்களா? பிதற்றல்களுக்கு ஒரு அளவில்லையா??

4 comments:

தாணு said...

`ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' னரிகள் நிறைய இருக்காங்க. இந்தியாவோ அமெரிக்காவோ மனிதர்களுக்கான தரைதானே , இதிலேன்ன பேதம்? ஆரம்பத்திலேயே எல்லா இந்தியர்கள் உணர்வும் இப்படித்தான்னு டப்பர்த்தம் பண்ணிக்காதீங்க

தாணு said...

தமிழ்ப் பிழைகளுக்கு மீண்டும் சாரி

Bharathi said...

வணக்கம், நன்றி. இந்த மாதிரி வலைகள் இருப்பதால் மனதில் உள்ளதை கொட்டி பகிர்ந்து கொள்ள முடிகிறது.

குமரன் (Kumaran) said...

சரியா சொன்னீங்க பாரதி! நீங்கள் சொன்ன அந்த ஜுனியர் விகடன் கட்டுரை படித்தபோது எனக்கும் இதே எண்ணங்கள் தான் வந்தன.

Related Posts Plugin for WordPress, Blogger...