Tuesday, October 04, 2005

இனி ஒரு நிதி செய்வோம்!

அன்புள்ள தமிழ் மக்களுக்கு,

வணக்கம். நான் அமெரிக்காவில் (கலிபோர்னியா) கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறேன். தமிழில் blogs பார்க்கும் போது மனது சந்தோஷப்படுகிறது. நான் வங்கியில் பணி புரிகிறேன். தமிழில் நிதி பற்றி எந்த வலையையும் காணோம், நாம் செய்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவு தான் இது. சுரதாவுக்கு (suratha.com) மிக்க நன்றி – unicode பக்கத்தை உருவாக்கியதற்காக. அறிமுகம் போதும், வாருங்கள் கொஞ்சம் பணம் பண்ணுவோம்.

எனக்கு அமெரிக்க பொருளாதரமும் மார்க்கெட்டும் தான் அத்துப்படி. இந்தியாவை விட்டு வந்து 11 வருடங்களாகி விட்டன. கடந்த 52 வாரங்களில் இந்திய மார்க்கெட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது, அதே சமயம் நிறையவே பயமுறுத்துகிறது. எனக்கு பரிச்சயமான மார்க்கெட்டைப் பற்றியே எழுதுகிறேன். இப்போதைக்கு எந்த மார்க்கெட்டில் காலை வைத்தாலும் ஜாக்கிரதை அவசியம். இதற்கு மேல் நான் எதுவும் எழுதுவதற்கு முன்னால், ஒரு Disclaimer: நான் யாருக்கும் அறிவுரை வ்ழங்கவில்லை. என்னுடைய எழுத்துக்களை உங்களுடைய ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அப்படியே பின்பற்றாதீர்கள். (அமெரிக்காவில் இந்த மாதிரி disclaimer கொடுக்கவில்லையென்றால் நம்மை மொட்டை அடித்து விடுவார்கள்!)

எனக்கு பிடித்த மார்க்கெட் எமர்ஜிங் மார்க்கெட். கடந்த 52 வாரங்களில் மட்டும் 60%க்கும் மேலாக லாபம் கொடுத்திருக்கிறது. இந்த லாபம் இன்னும் தொடருமா என்பது கேள்விக்குறியது. அமெரிக்காவில் வட்டி விகிதம் ரொம்ப எகிறாதவரை இந்த லாபம் தொடரும் என்பது என் கணக்கு. கீழ்க்கண்ட mutual funds வந்து அள்ளிக் கொள் என்று அழைக்கின்றன. இவை அனைத்தும் நல்ல படியாக நடத்தப்பட்டுள்ளன. No load funds. மேலும் விபரங்களுக்கு Yahoo Finance செல்லவும்.

TREMX
PRMSX
UMEMX
VEIEX
MEMEX
SSEMX

10 comments:

Mookku Sundar said...

வருக. வணக்கம். நானும் கலிஃபோர்னியாவில்தான் கடந்த ஐந்தாண்டுகளாக வசித்து வருகிறேன்.

உங்களுக்கு தெரிந்த அமெரிக்க ப்பொருளாதாரம் பற்றி, ஸ்டாக் மார்க்கெட் பற்றி தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும். என்னை போல பொருளாதார ஆர்வமுள்ள / ஞானசூன்யங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

Bharathi said...

தங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. மீண்டும் உரையாடுவோம்.

யாத்திரீகன் said...

ஹீம்.. வித்யாசமான களத்துட இறங்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள் பாரதி..

சுந்தர் சொன்ன மாதிரி.. எங்களுக்கு இந்த துறையில் அடிப்படி அறிவாவது கிடைக்கச்செய்யுங்க ;-)

வாசன் said...

தமிழில் அமேரிக்க பங்கு சந்தை மற்றும் Mutual Funds (தமிழ்?) பற்றி எழுதுவது நல்ல முயற்சி. வாழ்த்துகள். நன்றிகளும்.

ஒன்பது வருடங்களாக PBEQX ல் முதலீடு பண்ணியுள்ளேன், இந்த குறிப்பிட்டவொரு பண்ட் (தமிழ்?) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

முடிந்த போதெல்லாம் பாப் பிரிங்கர் -ஐ வானொலியில் கேட்பதுண்டு.

-வாசன்

தாணு said...

தமிழ் நிதி என்றவுடன் தயா`நிதி' கருணா`நிதி' பற்றிய பதிவுன்னு நெனைச்சு எட்டிப் பார்த்திட்டேன். சாரி. உங்க ஏரியாவில் கலக்க வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அன்பு said...

பாரதி, உங்களுக்கு மிக இயல்பான நடை (பேச்சுநடையை ஒத்த உரைநடை) இருக்கிறது, படிப்பதற்கு வெகு சுலபமாக ஈர்க்கிறது. பாராட்டுக்கள், தொடருங்கள்.

vassan said:
....
தமிழில் அமேரிக்க பங்கு சந்தை மற்றும் Mutual Funds (தமிழ்?) பரஸ்பர நிதி

Bharathi said...

உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி.

அன்பு: உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.

வாசன்: PBEQX வரைபடம் பார்த்தேன். கடந்த 9 வருடங்களில் ஒரு வருடத்துக்கு 5% லாபம் தான் கிடைத்திருக்கிறது. எனக்கு இந்த பரஸ்பர நிதி அவ்வளவு பரிச்சயமில்லை. முதலுக்கு மோசமில்லாமல் இருக்கிறது. அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம். இனிமேல் உங்கள் சேமிப்பை இதில் போடாமல் இன்னும் அதிக லாபம் வரக்கூடிய பரஸ்பர நிதிகளில் போட்டு பாருங்களேன். டிவிடென்களுக்கு வரிச்சலுகை உள்ளதால் இனி வரும் வருடங்களில் 5%க்கும் அதிகமாகவே லாபம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது போன்ற பரஸ்பர நிதிகளில் (Equity income funds) 10%க்கும் மேல் லாபம் கிடைப்பது கடினம்.

வாசன் said...

நன்றி அன்பு உங்களது தமிழாக்கத்திற்கு.

பாரதி: pbeqx ல் குறிப்பிட்டவொரு அளவில் பங்குகள் சேர்ந்தவுடன் மேலும் மாத முதலீடு செய்வதை நிறுத்திவிட்டேன். வேன்கார்ட் ல் சில பரஸ்பர நிதிகளில் நுழைந்துள்ளேன்,பிறகு அதுபற்றி கேட்கிறேன்.

மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு.

-வாசன்

Anonymous said...

Good info. Thanks

Bharathi said...

You are welcome... Thanks for the feedback!

Related Posts Plugin for WordPress, Blogger...