Saturday, February 18, 2012

சிறு துளி... (Update)

ஜனவரி 2006-ல் "சிறு துளி" என்ற பதிவு எழுதியிருந்தேன். ஆறு வருடங்கள் ஓடி விட்டன! சிறு துளிகளின் இன்றைய நிலவரம்.


கடந்த ஆறு வருடங்களில் பங்குச் சந்தை பல முறை சரிந்து நிமிர்ந்து விட்டது. இருந்தாலும் சிறு துளி போர்ட்போலியோ இது வரை 93% லாபத்தில் இருக்கிறது. பல சில்லரைக் காசுகள் சேர்ந்து $1,862!

Sunday, January 01, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Long time no see...! உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! 2011ம் ஆண்டு அவ்வளவாக சுவாரசியமாக இல்லை. இருந்தாலும், பங்கு சந்தையில் நஷ்டம் வராமல் சமாளிக்க முடிந்தது. பொதுவாக டிசம்பர் 3வது வாரத்தில் ரதமேறி வரும் சான்டா தாத்தா உடம்பு சுகமில்லாமல் வடக்கு துருவத்திலேயே இருந்து விட்டதால், பங்கு சந்தையில் Santa Claus Rally வொர்க் அவுட் ஆக வில்லை. 2012 வருடமும் சுமாராக தான் இருக்கும் போல தெரிகின்றது. அமெரிக்க job market நல்லபடியாக நிமிர்ந்தால், பங்கு சந்தையில் பணம் செய்யலாம். Good Luck!

New Year Celebrations in Times Square, New York

Sunday, December 04, 2011

போதி தர்மன் தமிழரா?


ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஏழாம் அறிவு பார்க்கப் போனால், டாகுமென்டரி படத்தை போல படத்தை முடித்திருக்கிறார்கள். போதி தர்மன் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதுண்டு, படத்தின் முன்பாதியில் கலக்கியிருக்கிறார்கள். பின்பாதியின் அளவுக்கதிகமான நோக்கு வர்மக் காட்சிகள் வெறுப்பாகி விட்டது. வில்லன் மட்டும் ஜெயித்துக் கொண்டேயிருந்தால் போரிங்..

போதி தர்மன் தமிழரா இல்லையா என்று சென்னையில் சுவரொட்டி யுத்தம் நடத்துகிறார்கள். யார்டா அவன் நாகர் சேனை என்று வலைத்தளத்தில் விவாதம் நடக்கிறது. போதி தர்மன் தெலுங்கா என்று கூட விவாதம் நடக்கிறது. பல்லவ மன்னர்கள் தமிழர்கள் இல்லையா?


Saturday, May 14, 2011

அலுவலகங்களில் நிஜமாகவே வேலை நடக்கிறதா?

காலையில் 9 மணிக்கு அலுவலகத்தில் காலெடுத்து வைத்தால் இமெயில் படிப்பதில் ஒரு மணி நேரம், மீட்டிங்கில் மூன்று மணி நேரம், கூட வேலை செய்பவர்களின் சொந்த கதை சோக கதை கேட்பதில் ஒரு மணி நேரம், ஸ்டார்பக்ஸ் காஃபிக்கு ஒரு மணி நேரம், offsite மீட்டிங் பற்றிய விவாதம் ஒரு மணி நேரம் மற்றும் பல இத்யாதிகள் என்று முடியும் போது மாலை 6 மணி ஆகி விடுகிறது.

அலுவலகத்தில் வேலை செய்ய விடாமல் படுத்துபவர்களில் முக்கியமானவர்கள் மைக்ரோ மேனேஜர்கள். நாம்கேவாஸ் மீட்டிங்குகளும் தம் பங்குக்கு புரொடக்டிவிட்டியை நாசமாக்குகிறது. இவற்றை பற்றிய ஜேசன் ஃபிரைடின் கண்ணோட்டம்.வாரத்தில் நான்கு மணி நேரம் யாரும் பேசக்கூடாது என்ற ஐடியா பிடித்திருக்கிறது. முக்கியமான சிந்தனையில் அல்லது வேலையில் இருக்கும்போது இன்ஸ்டென்ட் மெசஞ்சரை மூடி வைப்பதும் நல்லது. வேலையில் முழுக்கவனம் செலுத்த உங்கள் ஐடியாக்களையும் பரிமாறவும். நன்றி!

Saturday, April 09, 2011

மக்கள் சக்தி

மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை அன்னா ஹசாரே நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள் அண்ணா!

Anna Hazare

அன்னா ஹசாரேயைப் பற்றி படிக்கும் போது "மக்கள் சக்தி" என்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு கட்சியைப் பற்றி படிக்க நேர்ந்தது. திரு. உதயமூர்த்தி அவர்களின் மக்கள் சக்தி இயக்கத்தை சேர்ந்த சில நல்ல இதயங்களால் "மக்கள் சக்தி" கட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் 18 இடங்களில் மக்கள் சக்தி போட்டியிடுகிறது. 18 தொகுதிகளின் விபரங்கள் இங்கே.

உங்களுக்கு இந்த பதினெட்டு தொகுதிகளில் வாக்களிக்கும் உரிமை இருந்தால், தயவு செய்து மக்கள் சக்தி வேட்பாளர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பிராக்டிலாக பார்த்தால், மக்கள் சக்தியின் பதினெட்டு வேட்பாளர்களில் ஒருவர் ஜெயித்தாலே ஆச்சர்யம். திமுகவும், அதிமுகவும் சாராயத்தையும் பணத்தையும் லஞ்சமாக கொடுத்து வோட்டுகளை வாங்கிவிடும். இந்த தேர்தலில் லேப்டாப் கூட காரட்டாக தொங்க விடப்பட்டிருக்கிறது.

M.S. Udayamurthy

என் கல்லூரி நாளிலிருந்து திரு. உதயமூர்த்தியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரும் பல வருடங்களாக நாட்டுக்காக போராடுகிறார், இது வரை ஒன்றும் பெரிதாக அவரால் மக்களை திருத்த முடியவில்லை. இப்போது காலம் மாறி வருகிறது. இளைய சமுதாயம் விழித்து வருகிறது. இந்தியா மாற வேண்டும் என்ற தாக்கம் பரவலாக இருக்கிறது. "உன்னால் முடியும் தம்பி" என்ற உதயமூர்த்தியின் வாக்கு இந்த தேர்தலில் மக்கள் சக்திக்கு வாக்குகளை குவிக்குமா?

"ஜெயிப்போமா அல்லது தோற்போமா என்பதைப் பற்றி கவலையில்லை. ஊழலை எதிர்த்து போராடுவோம்" என்று சொல்லும் விஜய் ஆனந்தும், மக்கள் சக்தியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க: http://www.loksatta.org/tn/, Carnival time all around as Anna Hazare ends fast

The silence of good men is more dangerous than the brutality of the bad men - Martin Luther King

Thursday, March 10, 2011

பேலன்ஸ் ட்ரான்ஸ்பர் விளையாட்டு

நான்கு வருடங்களுக்கு முன்னால் கிரடிட் கார்டு கணக்கிலிருந்து பேலன்ஸ் ட்ரான்ஸ்பர் செய்வதால் சில நூறு டாலர்களை சம்பாதிக்கலாம் என்று எழுதியிருந்தேன். 2006-ல் வங்கிகள் டெபாசிட்டுக்கு கொடுக்கும் வட்டி விகிதம் 4% - 5% இருந்தது. இப்போது வட்டி விகிதம் 0.5%க்கு வந்து விட்டது. 2006-ல் workout ஆன இந்த விளையாட்டை இப்போது விளையாடுவதில் லாபமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க வங்கிகள் அநியாயத்துக்கு பரிமாண தொகையை (transaction fee) அதிகப்படுத்தி விட்டார்கள். $1,000 ட்ரான்ஸ்பர் செய்தால் $40 transaction fee. $10,000 ட்ரான்ஸ்பர் செய்தால் $400 கோவிந்தா.

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவராக இருந்தால், 0% APR பேலன்ஸ் ட்ரான்ஸ்பர் பற்றி ஏதாவது தபால் வந்தால் அதை கிழித்துப் போடுவது நல்லது.

Source: Balance Transfer Game

Wednesday, November 17, 2010

தங்கமே தங்கம் - Update

தங்கம் விலை சீறாக ஏறிக்கொண்டிருக்கிறது. இன்று தங்கம் 10 கிராமுக்கு 20,160 ரூபாய்க்கு இந்தியாவில் விற்கிறது. மேலை நாடுகளில் ஒரு அவுன்ஸ் $1,332 க்கு விற்கிறது. ஒரு அவுன்ஸ்க்கு 28.35 கிராம் என்ற கணக்கில் ஒரு கிராம் தங்கம் $47க்கு விற்கப்படுகிறது.

இன்னும் சில வருடங்களில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு $10,000 விலையை தொடும் என்று உறுதியாக சொல்கிறார் டெக்ஸாஸில் பென்ஷன் நிதி நடத்தும் Shayne McGuire. முழு விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும். ஒரு அவுன்ஸ் $10,000க்கு விற்றால் ஒரு கிராம் $352க்கு, தோராயமாக 15,500 ரூபாய்க்கு விற்க கூடும். ஒரு கிராம் தங்கம் இந்த விலைக்கு விற்றால் இந்தியாவிலும் சீனாவிலும் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். அது விலையை திரும்பவும் சமப்படுத்தும். ஒரு அவுன்ஸ் தங்கம் $10,000 என்ற சிந்தனையே வேடிக்கையாக இருக்கிறது. உலகம் முழுதும் பொருளாதாரம் படு சீரழிவு, பல நாடுகள் யுத்தம் என்ற ஒரு நிலைமை வந்தால தான் தங்கம் அந்த அளவுக்கு அநியாய விலையை அடையும். ஒரு அவுன்ஸ் $2,000 என்ற நிலைமை வரலாம். $10,000?!

இதைப்பற்றிய உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள் ப்ளீஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...